பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ജൂൺ இன்னிலை என்னும் நூல் பொய்கையார் இயற்றிய நாற்பத்தைந்து வெண்பாக்களைக் கொண்டது. இதற்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றும் உண்டு. 1915-இல் இந்த நூலைப் பதிப்பித்த வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள், இந்த நூலை மதுரை யாசிரியர்' என்பவர் தொகுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இதைக் கொண்டு இந்நூலை ஒரு தொகைநூல் எனலாம். ஆனால், இந்நூற் பாடல்கள் பலரால் பாடப் பட்டவை யல்ல; பொய்கையார் என்னும் ஒருவராலேயே இயற்றப் பட்டவை-என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்நூலை ஒருதொகை நூல் என்பது எவ்வாறு? ஒருவேளை,- பொய்கையார் இயற்றிய பல உதிரிப் பாடல்களிலிருந்து சிறந்த நாற்பத்தைந்து நல்ல பாடல்களை மதுரையாசிரியர் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கலாம். மற்றும், பொய்கையார் பாடல்களுடன், பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துப் பாடலையும் மதுரை யாசிரியர் சேர்த்துத் தொகுத்ததால், அவர் இந்நூலின் தொகுப் பாசிரியர் எனப்பட்டார் போலும்? எப்படியோ, இந்நூலுக்குத் தொகுப்பாசிரியர் என ஒருவர் சுட்டப்பட்டிருப்பதால், ஒரு வகையில் இந்நூலையும் ஒரு தொகை நூல் எனலாம். இந் நூல் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினைப் பற்றிக் கூறுவதாகும். 29. ஆசாரக் கோவை பெருவாயின் முள்ளியார் இயற்றிய நூறு பாடல்களைக் கொண்ட ஆசாரக் கோவை ஒரு தொகை நூல் அன்று; ஆயினும், நூலின் பெயரில் உள்ள கோவை’ என்னும் சொல் சிறிது எண்ணத்தைக் கிளறுகிறது. தொகை நூலைக் கோவை