பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் 401 பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாகவும், நாவுக்கரசரின் பாடல்கள் அடுத்த மூன்று திருமுறைகளாகவும் - அதாவது, நான்காவது ஐந்தாவது ஆறாவது திருமுறைகளாகவும், சுந்தரர் பாடல்கள் ஏழாவது திருமுறையாகவும் தொகுக்கப்பெற்றன. பின்னர், மாணிக்க வாசகரின் திருவாசகமும் திருக் கோவையாரும் எட்டாம் திருமுறையாகவும், திருவிசைப்பாதிருப்பல்லாண்டுப் பாடல்கள் ஒன்பதாம் திருமுறையாகவும், திருமூலரின் திருமந்திரம் பத்தாம் திருமுறையாகவும், திரு முகப் பாசுரம் முதலானவை பதினோராம் திருமுறையாகவும் தொகுக்கப் பெற்றன. சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் பன்னிரண்டாம் திரு முறையாகப் பின்னர்க் கொள்ளப்பட்டது. திருமுறைகள் வெளிவரச் செய்ததால், இராசராசன் 'திருமுறை கண்ட சோழன்' என்னும் சிறப்புப் பெயரால் வழங்கப்படுகிறான். இந்தப் பன்னிரண்டு நூல்களையும் இணைத்துப் பன்னிரு திருமுறைகள் எனத் தொகைப் பெயர் தந்திருப்பது, 'பன் மாலைத் திரள் வகையாகும். - முதல் ஏழு: - இங்கே இறுதி ஐந்து திருமுறைகளை விடுத்து, முதல் ஏழு திருமுறைகளை மட்டும் முதலில் எடுத்துக் கொள்ளலாம். மூவர் பாடல்களும் மூன்று நூல்களாக ஆக்க்ப்பட்டன. இவையே மூவர் தமிழ் என்னும் தொகைப் பெயர் பெற்றன. 'மூவர்தமிழ்’ என்னும் தொகையையும் பன் மாலைத் திரள். வகையில் சேர்க்கலாம். மூவர் தமிழ் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டதைப் பற்றிக் கூறும் பாடல்கள் இதற்கு அகச்சான்றுகளாம். மந்திரங்கள் ஏழு கோடியானதால் இப்பாடல்கள் ஏழு திரு. முறைகளாகத் தொகுக்கப்பட்டனவாம் பாடல்க்ள் வருமாறு: "மன்னுதமிழ் விரகர்எங்கள் காழி வேந்தர் வகுத்தருளால் அமைத்த திரு முறையோர் மூன்றும்,