பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் 467 புறத் திரட்டு (Bulletin of the Tamil Department NO.2) இதற்கு நீதித் திரட்டு என்ற பெயரும் உண்டு. பதிப்பு: எஸ். வையாபுரிப்பிள்ளை; சென்னை சர்வகலா சாலை (சென்னைப் பல்கலைக் கமகம்), சென்னை. பதிப்பாண்டு 1938. பல நூல்களிலிருந்து புறப்பொருள் பாடல்கள் தொகுக்கப் பெற்ற நூல் இது. தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. கி.பி. 15 ஆம் நூற்றாண்டிற்கு முன் தொகுக்கப்பட்டிருக்கலாம். திருக்குறள் அமைப்பைப் போல, அறத்துப்பால்-பொருட் பால் - காமத்துப் பால் என்னும் மூன்று பிரிவினதாக இத் தொகுப்பு உள்ளது. துறைகள் பன்னிரு படலத்தை ஒட்டி யு ள்ளன. - 1. அறத்துப் பால்: (1) கடவுள் வாழ்த்து முதலாக, (45) பழவினை ஈறாக உள்ள 45 தலைப்புகளில் 473 பாடல்கள் உள்ளன. 2. பொருட்பால்: (46) இறைமாட்சி முதலாக, (131) வாழ்த்து ஈறாக உள்ள 86 தலைப்புகளில் 1032 பாடல்கள் உள் ளன. 3. காமத்துப்பால்-(132) கைக்கிளை - ஒரே தலைப்பு 65 பாடல்கள்-ஆக மொத்தம் 1570 பாடல்களின் தொகுப்பாகும் இந்நூல். - இந்நூலில் இடம்பெற்றுள்ள நூற்பெயர்களும் மொத்தப் பாடல்களின் எண்ணிக்கையும் வருமாறு: 1. அறநெறிச் சாரம் 34 11. சாந்தி புராணம் 9 2. ஆசாரக் கோவை 27 12. சிந்தாமணி 142. 3. ஆசிரிய மாலை 16 13. சிறுபஞ்ச மூலம் 37 4. இராமாவதாரம் 27 14. சூளாமணி 79 5. இரும்பல் காஞ்சி 3 15. தகடூர் யாத்திரை 44 6. இன்னா நாற்பது 5 16. திரிகடுகம் 53 7. இனியவை நாற்பது 2 17. நளன் கதை 1 8. ஏலாதி 21 18. நாரத சரிதை 8 9. களவழி நாற்பது 10 19. நாலடியார் 212 10. குண்டல கேசி 19 20. நான்மணிக்கடிகை 45