பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 தமிழ் நூல் தொகுப்புக் கலை தாயுமானார் பாடல்கள் பல் வேறானவர்களால் பதிப்பிக்கப் பெற்ற 18 பதிப்புகள் வெளிவந்துள்ளன. 18 ஆண்டுகள் முறையே வருமாறு: 1884, 1869, 1871, 1872, பிப்ரவரி 1874, நவம்பர் 1874, மார்ச்சு 1875, சூலை 1876, பிப்ரவரி 1878, ஆகஸ்ட் 1878: அக்டோபர் 1879, 1881, நவம்பர் 1882, ஏப்ரல் 1885, 1886, அக்டோபர் 1888, 1891, மார்ச்சு 1897 - என்பனவாம். இத்த னைப் பதிப்புகள்ைக் கொண்டு, இந்நூலுக்கு இருந்த பெரிய வரவேற்பை அறியலாம். தாயுமானார் திருப்பாடல் திரட்டு பார்வை: திருத் தணிகைச் சரவணப் பெருமாளையர் முன் பதிப்பித்த பிரதிக்கிணங்க, தண்டலம் தமிழாசிரியர் சுப்புராய முதலியார் பார்வையிட்டது. வெளியீடு: தர்க்கோலம் நரசிம் முலு நாயுடு. அச்சு: விவேக சந்திரோதய அச்சுக்கூடம். காலம்; ஆங்கிரசபுரட்டாசி. மொத்தப் பாடல்கள்: சற ச ரு வ (1452). மாணிக்க வாசகர் - தாயுமானவர் பாடல்கள் தொகுப்பு: போப் ஐயர், ஜி.யூ. & அருணாசல முதலியார். வெளியீடு: ஜெ.எம். நாகரத்தினம் பிள்ளை. சி.என். அச்சுக் கூடம், சென்னை. ஆண்டு 1898. தாயுமானவரின் சில் பாடல் களுடன் மாணிக்க வாசகரின் சில பாடல்களும் இதில் உள்ளன. போப், இப்பாடல்கட்கு ஆங்கில மொழியாக்கமும் செய்து அமைத்துள்ளார். - தாயுமானி சுவாமிகள் பாடல் ஆய்வு: வித்துவான் ஆ.கமலநாத முதலியார். அச்சு: வெ.நா. ஜூபிலி பிரஸ், சென்னை. ஆண்டு 1899, உள்ளுறை: 'திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்” என்பது முதல் அருள் வாக்கிய அகவல் என்பது ஈறாக மொத்தம் 71 தலைப்புகளில் பற்பல பாடல்கள் அமைந்துள்ளன. இறுதியில் ஒரு பழைய பிரதியில் வண்ணத்தின் இடையிடையே காணப்படும் எட்டுக் 'கொச்சகங்கள் தரப்பட்டுள்ளன. . . எங்கள் வீட்டில் உள்ள இந்தப் படியின் (பிரதியின்) தாள் கள் பழுத்து விட்டன. ஒவ்வொரு தாளிலும் பல துளைகள் போடப்பட்டுள்ளன,