பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் தொகுப்புக் கலை 33 ‘Anthoogy' assārgylb Q& Tå gjáð ‘A collection of flowers’ (பூக்களின் தொகுப்பு) என்று பொருள கூறியிருப்பதல்லாமல், ‘A collection of the flowers of verse” (Luftës smir@u g# களின் தொகுப்பு) என்றும் ஒரு பொருள் கூறியுள்ளது. flowes of verse என்பதில், பாக்களாகிய பூக்கள் என்னும் உருவகம் அமைந்துள்ள அழகைக் கண்டு சுவைக்க முடிகிறது. இத்தகைய உருவகங்களின் வாயிலாக, பல்வேறு பூக்களைத் தொகுத்து (தொடுத்து) மாலையாக்கிப் பயன்படுத்தியது போலவே, பல்வேறு பாக்களையும் தொகுத்து நூலாக்கி மக்கள் பயன்படுத்தி வந்தனர் என்பது நன்கு புலனாகும். நூல் தொகுப்புக் கலை இதுகாறும் கூறியவற்றால், தமிழ் மொழியில் மட்டுமன்றி, பல்வேறு உலக மொழிகளிலும், உதிரிகளாயிருந்த பல்வேறு பாடல்களை நூல்களாகத் தொகுக்கும் கலை நடைபெற்று வந்தமை புலனாகும். பல்வேறு உதிரிப் பாடல்களை ஒரு நூலாகத் தொகுப்பதற்கும் கலை' என்று பெயரா? என்று வினவத் தோன்றலாம்...ஆம்! இஃதும் ஒரு கலையே! கலை களுள்ளும் அரிய பெரிய கலையாகும் இது! பயன்கலைக் கூறு பாடும் கவின்கலைக் கூறுபாடும் இணைந்த ஒர் உயரிய கலை இது! எந்தெந்த வகையிலெல்லாம் - எந்தெந்த நுட்பமான முறையிலெல்லாம் பாடல்கள் நூல்களாகத் தொகுக்கப்பட் டுள்ளன என்ற வியத்தகு செய்தி, அடுத்து அடுத்து வரும் பாகங்களில் மிகவும் விரிவாக - விவரமாக விளக்கப்படும். பின்வரும் விளக்கங்களைப் படித்தபின்பு, உதிரிப் பாடல்களுக்கு நூல் வடிவங் கொடுக்கிற நூல் தொகுப்புக் கலை மிகவும் கடினமானது - அரியது - அதே நேரத்தில் வியந்து மகிழ்தற் குரியது பெறலரும் பயனை அளிக்கவும் - வல்லது-என்றெல் லாம் எளிதில் உணரலாம். உலக மொழிகளில் இந்த நூலில் நாம் விவரிக்க எடுத்துக்கொண்டது தமிழ் நூல் தொகுப்புக்கலையே யாகும். இருப்பினும், மற்ற உலக மொழிகளின் நூல் தொகுப்பைப் பற்றியும் -இன்றியமையாத