பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/607

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டு 585 கலைவாணர் அரங்கில் 25-11-1971 ஆம் நாள் நாவலர் நெடுஞ் செழியனால் வெளியிடப் பட்டது. வெள்ளைப் பறவை ஆசிரியர்: அ. சீநிவாச ராகவன் (நாணல்). விற்பனை உரிமை: மெர்க்குரி புத்தகக் கம்பெனி, கோவை, செளந்தரா பிரின்டர்ஸ். சென்னை-17. முதல் பதிப்பு: மார்ச் 1967. உள் ளுறை: முக்குறுணிப் பிள்ளையார் முதல் அது போதும்' வரையுள்ள 107 தலைப்புகளில் பல பாடல்கள் அமைந்துள்ளன. நூலில் உள்ள வெள்ளைப் பறவை என்பது தலைப்பாகத் தரப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டு இது சாகித்ய அகாடமி பரிசு பெற்றது. - சுரதாவின் தேன்.மழை சுரதாவின் தேன் மழை போன்ற பாடல்களின் தொகுப்பு. தேன் துளிகள் என்னும் தலைப்பும் உள்ளது. சேகர் பதிப்பகம். சிெளந்தரா பிரின்டர்ஸ், சென்னை. ஏப்ரல் 1965. உள்ளுறை: ஆராய்ச்சி, இயற்கை, வரலாற்று வாயில், சொல் விளக்கம், காரணப் பெயர்கள், மங்கையர் பூங்கா, குறுங் காவியம், அகத் துறை, நெய்தல் செய்திகள், காவியக் கடிதங்கள், விழாத விழாக்கள், எப்போதும் இருப்பவர்கள், துன்பத் துறைமுகம், இசை விருந்து, மொழிச் செல்வம், தேன் துளிகள்-என்னும் பதி னாறு பெரிய தலைப்புகள் உள்ளன. பல உள் தலைப்புகளும் Զ-GT GIT GT, வாணிதாசன் நூல்கள் புதுச் சேரியில் ஆசிரியர் பணியாற்றிய என் நண்பர் அரங்கசாமி என்னும் வாணிதாசன் சிறந்த இயற்கைக் கவிஞர். அவர் நூல்கள் சில காண்பாம்: வாணிதாசன் கவிதைகள் ' வெளியீடு - மலர் நிலையம், சென்னை. முதல் பதிப்பு 1956. இயற்கை, இன்பம், மக்கள், புரட்சி, இசைக்குரியார், தமிழ், பூக்காடு என்னும் ஏழு தலைப்புகளில் பல பாடல்கள். பொங்கல் பரிசு வெளியீடு: அன்பகம், உறையூர், திருச்சி. அச்சு: கஸ்தூரி