பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/612

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590 தமிழ்நூல் தொகுப்புக்கலை . . தலைப்புகளில் பாடல்கள் உள. முதல் தலைப்பு நூலுக்குப் பெயராயிற்று. தூரன் கவிதைகள் ஆசிரியர்: ம. பெரியசாமித் தூரன். சுதந்திர நிலைய வெளியீடு. விற்பனை உரிமை: பாரிநிலையம்,சென்னை. மாருதி பிரஸ், சென்னை, முதல் பதிப்பு: செப்டம்பர், 1962. உள்ளுறை: இளந் தமிழா முதல் வாழிய உலகம் வரையான 17 தலைப்பு 'களில் பல்வேறு பாடல்கள் உள்ளன. இளந்திரையன் கவிதைகள் சாலை இளந்திரையனின் பாடல்களின் தொகுப்பு இது. வெளியீடு: யூனிவர்சல் பப்ளிஷர்ஸ், சென்ன்ன. அச்சு: யூனிவர்சல் பிரின்டிங்ஸ் ஹவுஸ், சென்னை. 1962. பல இதழ்களில் ஏறக் குறைய 12 ஆண்டுகளாக வெளிவந்த பாடல்களின் தொகுப்பு இது. உள்ளுறை: நிகழ்ச்சிக் கொடிகள், இயற்கை, அன்பு வாழ்க்கை, குமுறல், சிந்தனை, மலர்த்தோட்டம் என்னும் ஆறு பெரிய தலைப்புகளின் கீழ், ஓவியப் பிஞ்சுகள் முதல் "வாழ்க’ என்பது வரை 128 உள்தலைப்புகள் உள்ளன. கோவை இளஞ்சேரன் கவிதைகள் இளஞ்சேரனின் கவிதைத் தொகுப்பு. வெளியீடு: கலைக் குடில், நாகப்பட்டினம். மறைமலை அச்சகம், நாகப்பட்டினம். 1963. உள்ளுறை: நூல், அக இயல், புற இயல், பொது இயல் என மூன்று இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இம் மூன்று இயல்களிலும், முத்துக்கள் முதல் நன்றி முடிய உள்ள 40 தலைப்புகளில் பாடல்கள் அமைந்துள்ளன. - தமிழழகன் 5ನಿಣಕರ್ನ - தமிழழகன் இயற்றிய பாடல்களின் தொகுப்பு. இது வெளியீடு: பழநியப்பா பிரதர்ஸ், சென்னை. முதல் பதிப்பு' டிசம்பர் 1960. பல இதழ்களில் வந்த பாடல் தொகுப்பு இது. இதழ்களாவன:- - -