பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/649

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 627 முனிவர் சருக்கம் முதல் கண்கண்ட புலவர் சருக்கம் ஈறாக உள்ள 72 சருக்கங்களின் கீழ்ப் பாடல்கள் தரப்பெற்றுள்ளன. இனிப் புலவர்களின் பெயர்கள் வருமாறு: அகத்தியர், சடகோபர், திருவாதவூரர், விட்டுணு சித்தர், அப்பர், சம்பந்தர், திருமங்க்ை யாழ்வார், சுந்தரர், சேரமான் பெருமாள், ஒளவையார், காரைக்கால் அம்மையார், சிவ வாக்கியர், திருமூலர், இடைக்காடர், திருவள்ளுவர், பட்டினத் தார், சேந்த நாயனார், பத்திர கிரியார், திருப்பாணாழ்வார், கல்லாடர், நற்கீரர், பொய்யா மொழிப் புலவர், அருணகிரி நாதர், வில்லி புத்தூரார், தொண்டரடிப் பொடி யாழ்வார், பேயாழ்வார் - பொய்கை யாழ்வார் - பூதத் தாழ்வார் (மூன் றாழ்வார்), இரட்டைப் புலவர், குகை நமசிவாயர், குரு நமசி வாயர், தத்துவராயர், திருச் சிற்றம்பல நாடிகள், சிவப்பிர காசர், சாந்தலிங்க சுவாமிகள், குமார தேவ சுவாமிகள்,சிதம்பர சுவாமிகள், சோலைய சுவாமிகள், தாயுமானவர், குமர குருபரர், ஆறுமுக சுவாமிகள், முத்துத் தாண்டவர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், மெய்கண்ட தேசிகர், உமாபதி சிவாசாரி யார், கச்சியப்பக் குருக்கள், இரட்டைக் குரவர், பகழிக் கூத்தர், இரு வயிணவர், வரதுங்க பாண்டியர், கவிராச பண்டிதர், அபிராமப் பட்டர், புகழேந்தி, ஒட்டக் கூத்தர், கம்பர்,காளமேகர், வசைகவியாண்டான், வீரபாண்டிப் புலவர், கந்தசாமிப் புலவர், ஆறுமுகப் புலவர், சீநிவாசப் புலவர், நம.சி வாயப் புலவர், முதுகுளத்துாரார், மன்றவாணர், தலைமலை கண்ட தேவர், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், வயிரவப் புலவர், பர்ணப் புலவர், சத்தி முற்றப் புல்வர், பலதெய்வப் புலவர், அறிவுப் புலவர், கண்கண்ட புலவர்- முதலானோர். இவ்வளவு புலவர்களின் பெயர்களையும் வரலாறுகளையும் அறிவிக்கும் இப்புலவர் புராணம் மிகவும் பயனுள்ள தன்றோ? நூலின் இறுதியில், புலவர் புராண அநுபந்தம் என்னும் தலைப்பில் குல சேகர ஆழ்வார் சருக்கம்' என்னும் பகுதி யைச் செந்தில் நாயகம் பிள்ளை இயற்றிச் சேர்த்துள்ளார். இதிலுள்ள பாடல்கள் 29. -