பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/662

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640 தமிழ்நூல் தொகுப்புக் கலை பாடல்களின் தொகுப்பு இது. உ - அறிவுப் பகுதி, ஒற்றுமைப் பகுதி, புரோகிதப் பகுதி, பாட்டாளர் பகுதி, மாதர் பகுதி, மதப் பகுதி என்னும் ஆறு பெரிய தலைப்புகளின் கீழ்ப் பல உள் தலைப்புகள் உள்ளன. நவ ராத்திரிப் பாடல்கள் சேது சம்ஸ்தானத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவின் போது பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு. விவேக பாது அச்சியந்திர சாலை, மதுரை. 1913. பாடியோர் - நா. இராக வையங்கார் முதல் சிதம்பரப் புன்னை வன நாத முதலியார் வரையிலான 34 புலவர்கள். - செய்யுள் கதைகள் கதைகள் செய்யுள்களால் பாடப்பெற்ற தொகுப்பு. தொகுத்தவர் - எம். சண்முக சுந்தரம், சென்னை. தனியாம் பாள் விலாசம் பிரஸ், சென்னை, 1920. உ - பேராசை கொண்ட நரி முதல் விசுவாமித்திரன் வேள்விக்குக் காவல் செய்ய இராமனைக் கொண்டு செல்லல் வரையிலான 50 கதைப் பாடல்கள். கொய்த மலர் வெ - ஆரணி கவிஞர் கழகம், ஆரணி, 20 கவிஞர்களின் பாடல் தொகுப்பு. ஆரணி கவிஞர் கழகத்தின் பல்வேறு அரங்குகளில் நிறைவேறிய கவிதைகளின் திரட்டு. நூல் பெயர் சுவையாயுள்ளது. சிவ சங்கர தீட்சதர் பாடல்கள் ஆ - சிவ சங்கர தீட்சதர். வெ-சி.ஆர். சீநிவாச சாத்திரி பிரம்ம வித்தியா அச்சுக் கூடம், சிதம்பரம். 1892. சிதம்பரம் இறைவன்மேல் பாடிய பாடல்களின் தொகுப்பு. பல பாடல் திரட்டு - ஆ - பெரியண்ண செட்டியார். வெ. எஸ். சுப்பிரமணிய ஐயர். வித்தியா வர்த்தினி பிரஸ், சென்னை, 1879. தற்காலத் தமிழ்ப் பாடல்கள் பலவும் இசைப் பாடல்களும் இதில் உள்ளன.