பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 45 பன்னிரண்டாவது தொகைநூல், நம் நாட்டு நாகரிகத்தை நோக்க, மிகவும் அருவருப்பாக எண்ணத் தோன்றுகிறது. ஸ்ட்ராடன் (Straton) என்பவர், தன் னொத்த பால் இனத் தவரோடு-அதாவது ஆணோடு ஆண் கொள்ளும் காதல் பாடல் களைத் திரட்டி, ஒரு தொகைநூல் உருவாக்கினார் என்று முன்னோரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறோம் அல்லவா? அந்தத் தொகைநூலில் உள்ள பாடல்களுடன், அதே பொருள்பற்றிய , வேறு பாடல்களும் தொகுக்கப்பட்டு உருவாக்கப்பட்டதே இந்தப் பன்னிரண்டாவது தொகுதி. பதின்மூன்றாவது, பல்வேறு புதிய புதிய சில்லறைப் பாவினங்களின் தொகுப்பாகும். பதினான்காவது நூல், விடுகதைப் பாடல்கள், தெய்வுக் குறி சொல்லும் பாடல்கள், அல்ஜீப்ரா (Algebra) என்னும் குறியீட்டுக் கணக்கியலின் துணைகொண்டு இந்தக் காலத்தில் சிக்கல் தீர்க்கும்படியான கணக்கியல் பாடல்கள் ஆகியவற்றின் தொகுப்பாம். M பதினைந்தாவது தொகுப்பு, பல்வேறு வகைப் பிரிவைச் சேர்ந்த பொருள்களைப் பற்றிப் பல்வேறு தலைப்புக்களில் இயற்றப்பட்ட பாடல்களின் கதம்பக் கூட்டாகும். - பதினாறாவது தொகைநூல், இதுவரை சொல்லப்படாத coauth, Planudean Manuscript Torsyth ongougp35). படியில் உள்ளவையுமான மிகச் சிறந்த பாடல்களின் தொகுப் பாகும். - இவ்வாறாக, கிரீக் தொகை நூல்களைப் பதினாறு பாகங் களாக வகுத்தமைத்து உலக அரங்கில் உலவவிட்டது மிக்க பயனுள்ள செயலாகும். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுக் கால அளவில் எழுதப்பட்ட இந்தக் கிரீக் தொகை நூற் பாடல்கள் மக்களுக்கு வரலாற்று ஆர்வம் ஊட்டின. பல மொழிகளிலும் பல தொகைநூல்கள் தோன்றக் காரணமா யிருந்தன. இவற்றைப் பார்த்து இந்த மாதிரியில் பிற மொழி களில் தொகைநூல்கள் பல தோன்றியதல்லாமல், இந்தக் கிரீக் தொகை நூற் பாடல்கள், இலத்தீன், பிரெஞ்சு,ஆங்கிலம்