பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/713

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 691 1 - 11 போக, 12 கைலைக் கலம்பகம், 13. காசித்துண்டி விநாயகர் பதிகம். கைலைக் கலம்பகத்தில் சில செய்யுட்களே கிடைத்துள்ளன. காசித் துண்டி விநாயகர் பதிகம் கிடைக்கவில்லை. சென்ற நூற்றாண்டில் தேவர் பிரான் கவிராயர் இயற்றிய சிறப்புப் பாயிரம் ஒன்றில், குமர குருபரர் 14 நூல்கள் இயற்றி யதாக உள்ளது. மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரை மீனாட்சியம்மை குறம், தில்லைச் சிவகாமியம்மை இரட்டை மணிமாலை என்னும் மூன்றும் இவர் இயற்ற வில்லை என்கின் றனர். அச்சுப்பிரதிகளில் இவை உள்ளன. ஆனால் திருப்பனந் தாள் மடத்துப் பிரதியிலும் வேறு பழைய ஏட்டுப் பிரதிகளி லும் இவை மூன்றும் இல்லை. பரம்பரையாகப் பாடம் சொல் பவரும் இவற்றைப் பாடம் சொல்வதில்லை. மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் வேறு சிலரும் இவற்றைக் குமர குருபரர் நூலாகக் கொள்ளவில்லை. சில பதிப்புக்களில் இருப்பதால் நானும் சேர்த்துள்ளேன் - இது உ.வே.சா. கூறியிருப்பது. குமர குருபரர் நெல்லை மாவட்டத்து பூரீவைகுண்டம் என்னும் ஊரில் பிறந்தவர். காசியிலும் திருப்பனந்தாளிலும் மடம் அமைத்து ஒர் ஆதீனம் உருவாக்கியவர். காலம் 17ஆம் நூற்றாண்டு. குமர குருபரர் பிரபந்தத் திரட்டு வெளியீடு - ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகள். சென்னை கலா ரத்நாகர அச்சுக்கூடம். இரண்டாம் பதிப்பு - சுடகிருது, தை. உரைக்குறிப்புடன். உள்ளுறை: திருச்செந்தூர் கந்தர் கலி வெண்பா, மீனர்ட்சி யம்மை பிள்ளைத் தமிழ், மீனாட்சியம்மை குறம், மீனாட்சி யம்மை இரட்டை மணி மாலை, மதுரைக் கலம்பகம், நீதி நெறி விளக்கம், திருவாரூர் நான் மணிமாலை, முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, சிவகாமியம்மை இரட்டைமணி