பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/720

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

698 தமிழ்நூல் தொகுப்புக் கலை 64 பேர் எழுதிய திருவிளையாடல் பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றிய திருவாலவாயுடை யார் திருவிளையாடல் புராணம்' என்னும் நூல், 1927 ஆம் ஆண்டு (பிரபவ, சித்தின்ர) சென்னை கேசரி அச்சுக் கூடத்தில் இரண்டாம் பதிப்பாக அச்சிடப்பட்டது.இந்த நூலின் முகவுரை யில், உ.வே.சாமிநாத ஐயர் பின்வருமாறு எழுதியுள்ளார்: பரஞ்சோதியார் தமது திருவிளையாடல் புராணத்தைப் படித்துக் காட்ட வேம்பத்தூர் வந்தார். அங்கிருந்த 64 புலவர் கள், நாளை வா என்று கூறி, இரவோடு இரவாக 64 படலம் ஆளுக்கொன்று பாடி, மறுநாள் பரஞ்சோதியாரிடம் காட்டி, 'உன் வடமொழிப் பெயர்ப்பு நூல் ஏன் என்று கூறி விரட்டிய தாகவும், அதனால் பரஞ்சோதியார் அவர்களைச் சபித்துப் போனதாகவும் ஒரு கதை உள்ளதென எழுதியுள்ளார். ஆளுக்கொரு படலமாக 64 புலவர்கள் எழுதிச் சேர்த்த திருவிளையாடல் புராணம் இப்போது எங்கே உள்ளது? ஒரு வேளை, பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றிய புராணம்தான் இது என்று கூறப்படுமோ? ஒன்றும் புரிய வில்லை-குழப்பமாக உள்ளது. யான் (சு.ச.) எழுதுகிற இந்நூல் தொகைநூல்கள் பற்றி யது ஆதலின், 64 பேர் எழுதிய திருவிளையாடல்’ என்னும் தலைப்பு இவண் தரப்பட்டது. இது ஒர் அறிமுகம். தோத்திரப் பாக்கள் திரட்டு வெளியீடு-சென்னை தி.மு. ஏழுமலை செட்டியார் - 1950. நூல்கள் : ஒளவையாரின் விநாயகர் அகவல், சண்முக கவசம், கந்தர் சஷ்டி கவசம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், திரு முருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா, வள்ளலாரின் தெய்வ மணி மாலை, மதுரை மீனாட்சியம்மன் கலிவெண்பா, முருகன் புகழ் மாலை, மற்றும், பல நூல்களிலிருந்து திரட்டிய தனிப் பாடல்கள்-ஆகியவற்றின் திரட்டு. தோத்திரப் பிரபந்தத் திரட்டு ஆ-ஆந்திரக் காசியட திம்மப்ப அந்தணர், செவ்வாய்ப் பேட்டை, மாணிக்க விவாச அச்சுக்கூடம். நூல்கள்-சமய