பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/734

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

712 தமிழ்நூல் தொகுப்புக் கலை பாடல், குரு நாதாந்தம், மாணிக்கவாசகர் பாடல்கள் சில, மாணிக்க மூர்த்தி வெண்பா, கங்கையறு ஞானம், சிவ புராணம், நெஞ்சறி விள்க்கக் காப்பு, பத்திரகிரியார் புலம்பல், ஆனந்தக் களிப்பு, குதம்பைச் சித்தர் பாடல், சிவ்மாலை, ஞானக் கும்மி - முதலிய பலநூல்களின் பெரிய தொகுப்பு இது. தொட்டிக்கலை மதுரகவி சுப்பிரமணிய முனிவர் பிரபந்தங்கள் - (முதல் பகுதி) திருவாவடுதுறை ஆதீன வெளியீடு. விசய ஆவணி-விநா யக சதுர்த்தி-1953. ஆய்வு: த.ச. மீனாட்சி சுந்தரம் பிள்ளை. பாரதி அச்சுக் கூடம், குடந்தை. நூல்கள்: திருக்குற்றாலச் சித்திரை சபைத் திருவிருத்தம், திருத்தணிகைத் திருவிருத்தம், சுப்பிரமணியர் திரு விருத்தம், மாதவச் சிவஞான யோகிகள்மீது கீர்த்தனையும் பாடல்களும், திருச்சிற்றம்பலத் தேசிகர் சிந்து, அம்பலவாண தேசிகர் பஞ்ச ரத்னமாலை, அம்பல வாண தேசிகர் ஆனந்தக் களிப்பு, திரு மாளிகைத் தேவர் திருவிருத்தங்கள், ஞான மா நடராசர் கட்டியம் - என்னும் ஒன்பது நூல்களின் திரட்டு இது. யாழ்ப் பாணம் வேலணையூர் பேரம்பலப் புலவர் நினைவு மலர் நூல்கள்: பேரம்பலப் புலவர் இயற்றிய வண்ணைச் சிலேடை வெண்பா, வேலனை இலந்தைக் காட்டுச்சித்தி விநாய கர் இரட்டை மணி மாலை என்னும் இரு நூல்கள், பேரம்பலப் புலவர் மீது க.பொ. இரத்தினம் இயற்றிய பேரம்பலப் புலவர் பதிகம், இப்புலவர்மீது மற்றும் பலர் இயற்றிய பாடல்கள். - ஆகியவற்றின் திரட்டு இது. வெளியீடு: பண்டிதர் , க.பொ. இரத்தினம். நாவலர் அச்சுக் கூடம், யாழ்ப் பாணம் - 1935. அவி நாசி நாதர் தோத்திரக் கொத்து அந்தியூர் அவிநாசி நாதர் என்பவர், திருக்கோவலூரில் இருந்த முதல் ஞானியாரடிகள்மீது பாடியது. புலிசை ஞானி யார் மடாலய வெளியீடு. சாது அச்சுக்கூடம், சென்னை- 1939.