பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தமிழ் நூல் தொகுப்புக் கலை அந்தத் தொகைநூற் பாடல்களுடன் உதிரிப் பாடல்களும் சேர்க்கப்பட்டு "Anthologica Latina என்னும் பெயரில், ஒரு பெரிய தொகை நூல் வெளியிடப்பட்டது இது, கி.பி. 1849 -1926 ஆகிய கால அளவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டும். பல பதிப்புக்கள் பெற்றும் நடை போட்டு வந்தது. அலெக்சாந் தர் fGugsv' (Alexander Riese), “G)69 stübtorr.asvá' (Lommatzsch) முதலியோர் இந்த நூலைப் பதிப்பித்தனர். இதே பெயரில், செர்மன் பேரறிஞர் ஃபிரான்ஸ் புச்செலர்' (Franz Bucheler) என்பவர், பெரிய அளவில் ஒரு தொகைநூல் வெளியீடு செய்தார். இது கி.பி. 1869-1897 ஆண்டு இடை வெளியிற்பெரிதும் பயன்படுத்தப்பெற்று வந்தது. இவ்வாறாகக் கிரீக் தொகை நூல்களுக்கு அடுத்த பெருமையுடையனவாக இலத்தீன் தொகை நூல்கள் தோன்றி விளங்கின. கிரீக் தொகைநூல்களைப் போலவே இலத்தீன் தொகை நூல்களும் பல பெரிய பகுதிகளாகப் பகுத்துத் தொகுத்து வெளியிடப்பெற்றுள்ளன. இருபத்து மூன்று பகுதிகள் கிரீக் கையெழுத்துப்படித் தொகுதிக்கு ஒத்த பெருமை யுடையதும், இன்றியமையாச் சிறப்புடையதுமான இலத்தீன் கையெழுத்துப்படி முமுமையும் ழான் லக்குர்னே (JeanLacurne) என்பவரால், சேமேஸ் (Saumaise) என்பவர்க்கு அளிக்கப் பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதில் அடங்கியுள்ள இலத்தீன் தொகைநூல்கள், இருபத்துமூன்று பகுதிகளாக வகைதொகை செய்யப்பட்டிருக்கும் விவரம், ரியெஸ் (Riese) என்பவரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இலத்தீன் தொகை நூல்களிலுள்ள பாடல்களை இயற்றிய ஆசிரியன் மார் பெயர்களின் முழுப் பட்டியலையும் ரியெஸ் கொடுத்துள்ளார். இனி, இலத்தீன் தொகை நூல்களின் இருபத்து மூன்று பகுதிகளைப் பற்றிய விவரங்கள் முறையே வருமாறு: (1-6) முதல் ஆறு பகுதிகள் அழிந்து போனமையால், அவற்றைப் பற்றிய விவரம் சரிவரத் தெரியவில்லை.