பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தமிழ் நூல் தொகுப்புக் கலை நூல்களையும் காலவாரியாக வகைப்படுத்திப் பத்துத் தொகுதி களில் அடக்கிவிட்டார். அவை வருமாறு: (1) பதினைந்து -பதினாறாம் நூற்றாண்டுகளில் தோன் றிய பாடல் தொகைநூல்கள் முதல் தொகுதியாகும். (2) பதினைந்து - பதினாறாம் நூற்றாண்டுகளில் தோன்றிய உரைநடைத் தொகை நூல்கள் இரண்டாம் தொகுதியாகும். . (3) பதினேழாம் நூற்றாண்டுப் பாடல் தொகை நூல் கள் மூன்றாம் தொகுதியாகும். - - (4) பதினேழாம் நூற்றாண்டு உரைநடைத் தொகை நூல்கள் நான்காம் தொகுதியாகும். (5) பதினெட்டாம் நூற்றாண்டுப் பாடல் தொகை நூல் கள் ஐந்தாம் தொகுதியாகும். s (6) பதினெட்டாம் நூற்றாண்டின் உரைநடைத் தொகை நூல்கள் ஆறாம் தொகுதியாகும். (7) பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த பாடல் தொகை நூல்கள் ஏழாம் தொகுதியாகும். (8) பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலெழுந்த உரைநடைத் தொகைநூல்கள் எட்டாம் தொகுதியாகும். (9) பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிப் பாடல் தொகைநூல்கள் ஒன்பதாம் தொகுதியாகும். (10) பத்தொன்பதாம் நூற்றிாண்டின் பிற்பகுதி உரை நடைத் தொகைநூல்கள் பத்தாம் தொகுதியாகும். மேற்கூறியுள்ள காலவாரித் தொகுதி முறையினை ஊன்றி நோக்குங்கால், காலம் செல்லச் செல்லப் பிரெஞ்சு மொழியில் தொகைநூல்கள் பெருகிக் கொண்டேயிருந்த பேருண்மை புலனாகும். தமிழைவிட, ஐரோப்பிய மொழிகளில் உரைநடை நூல்களும் செய்யுள் நூல்களைப் போலவே சிறந்த இலக்கியங் கள்ாக மதிக்கப்படுவதால், ஆங்கு உரைநடைப் பகுதிகளும் தொகுக்கப் பெற்றுத் தொகைநூல்கள் ஆக்கப்பட்டுள்ளன.