பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

೩೧5 மொழிகளில் நூல்தொகுப்புக் கலை 57 வரிகள் கொண்ட ஒரு பாடல் எழுதி, இவரது பாடல்களின் அருமையைப் புலப்படுத்தியுள்ளார். 'வில்லான்’ என்னும் பெயரை அனைவரும் நன்கு அறிவர் என்னும் செய்தியால், இவரது இலக்கிய உலகப் புதுப் பெயர் -புனை பெயர் வில்லான்' என்பதாக இருக்கலாம் என்றும், மற்றப் பெயர்கள் இயர்பெயர்-குடும்பப் பெயர்களாக இருக் கலாம் என்றும் நாம் உய்த்துணரலாம். இவரைப் பற்றி வேறொருபுலவர் சிறப்பித்துப் பாடியிருப்பதாகக் கூறப் பட்டிருப்பதும் இங்கே குறிப்பிடப்படத்தக்கதாகும்." இறுதிப் புலவர்-113ஆம் புலவர்: BAUDELAIRE Pierre-Charles Baudelaire, ne'a' Paris, en 1821; more en 1867, “Vous auez cr‘e’ un frisson nouveau” VICTOR HUGO (cite par Theobhlie Grautier dans la Pre“face des Fleur du Mal) இந்தப் பகுதியின் கருத்து வருமாறு: "பியர் ஷார்ல் பொதெலேர்' என்பது இவரது முழுப் பெயர். இவர் பாரிசில் 1821இல் பிறந்தார்; 1867-இல் இறந்தார். இவரை நோக்கி, விக்தொர்ஃபூகோ, என்னும் பேரறிஞர். நீங்கள் பிறர் அதிர்ச்சியடையும்படியான சிறந்த புதிய படைப்பை அளித்திருக்கிறீர்கள், என்று புகழ்ந்திருக் கிறார். இந்தச் செய்தியை, தியோஃபில் கொத்யேர், (Theophile Gautier) erdirayib » West, Fleurs du Ma என்னும் நூலின் முகவுரையிலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக, மாபெரும் புலவர் விக்தொர் ஃபூகோ அவர் களாலேயே பாராட்டப்பட்டிருப்பது, பொதெலேர் அவர் களின் புலமைச் சிறப்புக்குத் தக்க சான்றாகும். இனி இரண்டாவது தொகைநூல் வருமாறு: 2. NOUVELLE ANTHOLOGIE POETIQUE