பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 தமிழ் நூல் தொகுப்புக் கலை விட முடியாது; தொகுப்பதற்கு ஆயிரம் ஆண்டுகட்குமுன் இயற்றப்பட்ட பாடல்களும் இருந்திருக்கலாம். பலராலும் பல காலத்தில் எழுதப்பட்ட பாடல்கள் ஒரு காலத்தில் ஒரிடத்தில் தொகுக்கப்பட்டன என்பதுதான் உண்மை. எது முதல்? மேற்கூறிய நான்கு தொகைகளுள் நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை என்னும் அகப்பொருள் நூல்கள் மூன்றும் முதலில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்குமா? அல்லது, புறநானூறு முதலில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்குமா? இந்த விவிைற்கு விடையிறுப்பது அரிது; இருப்பினும் முயன்று பார்ப்போம் : கடைச் சங்க காலப் புலவர்களுள், அனிலாடு முன்றிலார், ஒரில் பிச்சையார், ஓர் ஏர் உழவனர். கங்குல் வெள்ளத்தார், கல்பொரு சிறுநுரையார், செம்புலப் பெயரீைரார், தும்பிசேர் கீரனர், தேய்புரிப் பழங்கயிற்றினர், மீனெறி துண்டிலார், விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனர் முதலியோர் பாடல்கள் எட்டுத் தொகை நூல்களில் இருப்பதைக் காணலாம். மேலே குறிப்பிட்டுள்ள புலவர் களின் பெயர்கள் இயற்கையான இடுகுறிப் பெயராய் - இயற் பெயராய் இல்லாமல், காரணப் பெயராய் இருப்பது புலப்படும். அந்தப் பெயர்களிலுள்ள முழுத்தொடரோ, அல்லது ஒரு பகுதியோ, அவரவர் பாடிய பாடலில் அமைந் திருக்கக் காணலாம். இவ்வாருக ஏறக்குறைய முப்பதின்மர் பெயர்கள் அமைந்துள்ளன எனலாம். குறிப்பிட்ட ஒரு பாடலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை யெனில், அப்பாடலில் உள்ள ஒரு சிறந்த தொடரால் கற்பனேயாக ஒரு பெயரைப் படைத்து, அதுதான் ஆசிரியர் பெயர் எனச் குட்டுவது அக்காலத்து மரபு எனத் தெரிகிறது. - எடுத்துக் காட்டாகப் - பெயர் முழுதும் பாடலில் அமைந்த புலவர் ஒருவரையும் அவர்தம் பாடல்களுடன் இவண் காண்போம்: "ஓர் ஏர் உழவனுர்’ என்னும் புலவரின் பாடல்கள் குறுந் தொகையில் ஒன்றும், புறநானூற்றில் ஒன்றும் உள்ளன. அவை வருமாறு : تی نبوع بيعة "د எட்டுத் தொகை 2:#. (குறுந்தொகை-131) ஆடமை புரையும் வனப்பிற் பனைத்தோட் பேரமர்க் கண்ணி யிருந்த ஆரே நெடுஞ்சே னரிடை யதுவே நெஞ்சே ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து ஓர்ஏர் உழவன் போலப் பெருவிதுப் புற்றன்ருல் கோகோ யானே.” (புறநானூறு - 1931 * அதளெறிக் தன்ன நெடுவெண் களரின் ஒருவ ட்ைடும் புல்வாய் போல ஒடி யுய்தலுங் கூடுமன் ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே." மேலுள்ள இரு பாடல்களுள் குறுந்தொகைப் பாடலில், ஒர் ஒர் உழவன் போல’ என ஒரே ஏரையுடைய உழவனை விதந்து பேசியிருப்பதால், அந்த ஒர் ஏர் உழவன்' என்னும் தொடராலேயே ஓர் ஏர் உழவனர்' என ஆசிரியர் பெயர் வழங்கப்பட்டுள்ளார். பெயர் முழு தும் பாடலில் அமைந் துள்ள புலவர் இவர். இப் புலவர் பெயரால் உள்ள "அதளெறிந் தன்ன' என்னும் புறநானூற்றுப் பாடலில், ஒர் ஏர் உழவன் என்னும் தொடரிலுள்ள ஒரு சொல்கூட. இல்லையென்பது நினைவில் வைத்திருக்க வேண்டியதாகும். அடுத்து. - 'தும்பி சேர் கீரனர் என்னும் புலவரின் பாடல்கள் குறுந்தொகையில் (61, 315, 315, 320, 392) ஐந்தும், நற்றிணையில் (277) ஒன்றும், புறநானுாற்றில் (219) ஒன்றும் உள்ளன. அவற்றுள் குறுந்தொகைப் பாடல் ஒன்றும் நற்றினைப் Lurra–svrub, புறநானுாற்று பாடலும் வருமாறு : (குறுந்தொகை-362) அம்ம வாழியோ மணிச்சிறைத் தும்பி! கன்மொழிக் கச்ச மில்லை யவர்காட்டு அண்ணல் கெடுவரைச் சேறி யாயிற் கடவை மிடைந்த துடைவையஞ் சிறுதினத்