பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தமிழ் நூல் தொகுப்புக் கலை திரட்டுக்கம் : o மக்கள் உதிரிப் பாடல்களைத் திரட்டி வைப்பதில் உள்ள ஒர் இயற்கை உண்மையையும் ஈண்டு மறப்பதற்கில்லே. எதையும் சேர்த்துவைக்கும் இயற்கைப் பழக்கம் மக்களுக்கு உண்டு. சிறு குழந்தைமுதல் முதியவர்வரை இந்தப் பழக் கத்திற்கு எவரும் விலக்கல்லர். சிரு.ர்கள் எந்தப் பொருளைப் பார்த்தாலும் தமக்கு வேண்டும் என்று எடுத்துக்கொண்டு, முன்பு திரட்டி வைத்திருக்கின்ற பொருள்களோடு இதனையும் சேர்த்து வைத்துக்கொள்வர். சோடாத்தக்கைகள், திரைப் பட விளம்பசத் தான்கள், அஞ்சல் தலைகள், தீப்பெட்டிப் படங்கள், கோலிக்குண்டுகள், பம்பரங்கள், பட்டங்கள், தகர - இரும்புச் சாமான் வகைகள், பொம்மைகள், பல்வேறு விளையாட்டுப் பொருள்கள், இன்ன பிறவற்றை நிரம்பத் திரட்டிச் சேர்த்து வைப்பதில் சிரு.ர்களுக்கு உள்ள ஆர்வத் திற்கு அளவேயில்லை. சிருர்கட்கு வகைகளும் பலவாயிருக்க வேண்டும்: ஒவ்வொரு வகையிலும் எண்ணிக்கையும் மிகுதி யாயிருக்க வேண்டும் எத்தனை வகைப் பொருள்களையும் சேர்க்க அவர்கள் தயங்கமாட்டார்க . ஒவ்வொரு வகை யிலும் எத்தனை கிடைத் தாலும் அவர்தம் உள்ளம் நிறைவு பெருது. இன்னும் திரட்டிச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்னும் பேரவா பெருகிக் கொண்டே யிருக்கும். சிருர்களின் இயல்பு. சிரு.ர்களின் பேரால் இவ்வளவும் சொன்குேம். இவ்வள 室) தி: வையும் எல்லா வயதினருக்கும் எல்லாத் துறை மாந்தருக்கும் பொருத்திக் கொள்ளவேண்டும். அந்தந்த வயதினரும், அந் தந்தத் துறையினரும், அவரவருக்கேற்பப் பொருள்களை நிரம்பத் திரட்டிச் சேர்த்து வைத்துக்கொள்ள முயல் டுகள், எத்த ைகாரிை நிலங்கள், எவ் g م را به نام پسر ها می கின்றனர்; எத்தனை வீ. வளவு காசு பனங்கள் , இன்னும் எத் ஃன வகையான பொருள்கள் சேர்ந்தாலும் தெஞ் ம் நிறைவு பெறுவதில்லை. சிலர் பிள்ளை பெறுவதிலும் நிறைவுற்ரு இலர். சிலர் எத்தனை நாள்காட்டிகள் (காலண்டர்கள்) கிடைத்தாலும் நிறைவுருமல், மேலும் பல பெற விரும்பிப் பல கடை நூல் தொகுப்புக் கல்ே 21 களிலும் நிறுவனங்களிலும் படி ஏறிப் பல்லிளித்துக் கேட்டு, நிற்கும் கண்கொள்ளாக்காட்சியை என்றும் மறக்கமுடியாது. பெண்களோ, எத்தனை வகையான உலோகங்களில், எத்தனை வகையான பாத்திரங்களில் எத்தனை வாங்கிலுைம், எவ் வளவு ஆடை அணிகலன்கள் பெற்றிருந்தாலும், உள்ளம் நிறைவுறுவதில்லை. இன்னும் திரட்ட வேண்டும்; மேன் மேலுஞ் சேர்க்கவேண்டும் என்றே விரும்புகின்றனர். இந்த இயல்பு எல்லாவகை மாந்தர்க்கும் நிரம்ப உண்டு. இவ்வாறு பொருள்களைத் திரட்டுவதில் உள்ள ஊக்கத் திற்குத் திரட்டு ஊக்கம் (Acquisition) என்று உளவியலார் (Psychologists) பெயரிட்டுள்ளனர். பிறந்த குழந்தை முதல் எல்லாருக்குமே உணவு ஊக்கம், போர் ஊக்கம், திரட்டு ஊக்கம், படைப்பு ஊக்கம், காதல் ஊக்கம், குழு ஊக்கம் முதலிய பதினன்கு ஊக்கங்கள் உள்ளனவாம். . இவை உரிய வயதில் ஒவ்வொன்ருய்த் தோன்றத் தொடங்கும். இந்த ஊக்கங்கட்குப் பொதுவாக இயல்பு osa ša; šiscit” (Instincts) என்று உளவியலார் பெயர் சூட்டியுள்ளனர். துய்மை செய்தல் : இந்த ஊக்கங்களைப் பற்றி ஒரு நல்ல கருத்து உளவி யலாரால் உரைக்கப்பட்டுள்ளது; இந்த ஊக்கங்கட்கு அடிமை யாகி இவற்றின் போக்கில் விட்டுவிடலாகாது. இவற்றை நல்வழியில் திருப்பிப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாகப் போர் ஊக்கத்தைப் பற்றிப் பார்ப் போம். ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கொள்வதும் அடித்துக் கொள்வதும் அழித்துக் கொள்வதுமாகப் போர் ஊக்கம் செயல்பட விடக்கூடாது. இதற்குப் பதிலாக, வறுமை, பிணி. அறியாமை, மூடப்பழக்க வழக்கம் முதலிய வற்றை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவதிலும், நில நடுக்கம் - எரிமலை - புயல் - வெள்ளம் முதலிய இயற்கையின் கொடுமைகளோடு போராடிக் காத்துக் கொள்வதிலும், இன்ன பிற நல்வழிகளிலும் போர் ஊக்கத்தைப் பயன் í படுத்தவேண்டும். இவ்வாறு ஒர் ஊக்கத்தை அதன்