பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தமிழ் நூல் தொகுப்புக் கலை கொழித்தெடுப்பவனது விருப்ப - வெளியீடு ) என்னும் பிரெஞ்சுத் தொகை நூலை உருவாக்கினர். பத்தொன்பதாம் நூற்ருண்டில் தோன்றிய 'Le Parnasse’ தொகை நூல் மிகவும் புகழ்பெற்றதாகும். பள்ளிப் பாடல்கள், பல இதழ்ப் (பத்திரிகைப்) பாடல்கள் ஆகிய வற்றின் தொகுப்பு இது. கி. பி. 1928-இல், ழுய்ல் மக்சிம் பியர் வால்த்ஸ் (Jules Maxime Pierre Waitz) . . பவர், ஒரு கிரீக் தொகை நூலின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பை வெளியிட்டார். இவ்வாருக, காலத்துக்குக் காலம், பிரெஞ்சுத் தொகை நூல்களுள் சில முதல் நூல்களாகவும்,சில வழி நூல்களாகவும், சில சார்பு நூல்களாகவும் தோன்றத் தோன்ற, பிரெஞ்சு நூல் தொகுப்புக்கலை செழித்து வளர்ந்து வரலாயிற்று. கிரிக்-இலத்தீன் தொகை நூல்களைப் போலவே, பிரெஞ்சுத் தொகை நூல்களும் பிற்காலத்தில் பல தொகுதி களாக வகுத்து அடக்கி வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிவாரி வெளியீட்டுப் பணியைப் பாரிசில் உள்ள “evel56io ữãTevơ:Ih ” (Liblio Theque Larousse) Qơ uủgeirsırgi. தொகுத்தளித்தவர் கொத்தியெர் ஃபெர்ரியெர் (Gauthier Ferrieres) என்னும் அறிஞராவார். இவர், பதினைந்தாம் நூற்ருண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்ருண்டு வரை தோன்றியுள்ள தொகை நூல்களை யெல்லாம் எடுத்துக் கொண்டார்; உரைநடைத் தொகுப்புக்களையும் இவர் விட்டாரிலர்: எல்லாத் தொகை நூல்களையும் காலவாரியாக வகைப்படுத்திப் பத்துத் தொகுதிகளில் அடக்கிவிட்டார். அவை வருமாறு: (1) பதினேந்து-பதினரும் நூற்ருண்டுகளில் தோன்றிய பாடல் தொகைநூல்கள் முதல் தொகுதியாகும். - (2) பதினைந்து - பதிஞரும் நூற்ருண்டுகளில் தோன்றிய உரைநடைத் தொகை நூல்கள் இரண்டாம் தொகுதி யாகும். - - - பிரெஞ்சுத் தொகை.நூல்கள் 55 (3) பதினேழாம் நூற்ருண்டுப் பாடல் தொகை நூல் கள் மூன்ரும் தொகுதியாகும். (4) பதினேழாம் நூற்ருண்டு உரைநடைத் தொகை நூல்கள் நான்காம் தொகுதியாகும். (5) பதினெட்டாம் நூற்ருண்டுப் பாடல் தொகை நூல்கள் ஐந்தாம் தொகுதியாகும். (6) பதினெட்டாம் நூற்ருண்டு உரைநடைத் தொகை நூல்கள் ஆரும் தொகுதியாகும். (7) பத்தொன்பதாம் நூற்ருண்டின் முற்பகுதியில் எழுந்த பாடல் தொகைநூல்கள் ஏழாம் தொகுதியாகும். (8) பத்தொன்பதாம் நூற்ருண்டின் முற்பகுதியி லெழுந்த உரைநடைத் தொகைநூல்கள் எட்டாம் தொகுதியாகும். - (9) பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதிப் பாடல் தொகைநூல்கள் ஒன்பதாம் தொகுதியாகும். (10) பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதி உரை நடைத் தொகைநூல்கள் பத்தாம் தொகுதியாகும். மேற்கூறியுள்ள காலவாரித் தொகுதி முறையினை ஊன்றி. நோக்குங்கால், காலம் செல்லச் செல்லப் பிரெஞ்சு மொழியில் தொகைநூல்கள் பெருகிக் கொண்டேயிருந்த பேருண்மை புலகுைம். தமிழைவிட, ஐரோப்பிய மொழி களில் உரைநடை நூல்களும் செய்யுள் நூல்களைப் போலவே சிறந்த இலக்கியங்களாக மதிக்கப்படுவதால், ஆங்கு உரை நடைப் பகுதிகளும் தொகுக்கப் பெற்றுத் தொகைநூல்கள் ஆக்கப்பட்டுள்ளன. சில சிறப்புக்கள் பிரெஞ்சுத் தொகைநூல்களின் அமைப்பில் குறிப்பிடத் தக்க சில சிறப்புக்கள் உண்டு. பாடலின் முகப்பில் ஒரு தலைப்பு இருக்கும். பாடலின் அடியில் ஆசிரியர் பெயர். ஆண்டு. அந்தப் பாடல் அமைந்துள்ள நூற் பெயர்.