பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•62 தமிழ் நூல் தொகுப்புக் கலை 3. The Harrap Anthology of French Poetry இந்த பிரெஞ்சுத் தொகை நூலின் பெயர் ஆங்கிலத்தில் தரப்பட்டிருப்பது வியப்பா யிருக்கலாம். ஆம்! இஃது ஆங்கிலேயர்கள் படிப்பதற்காகத் தொகுத் தளிக்கப்பட்ட :பிரெஞ்சுப் பாடல் தொகைநூலாகும். அதல்ைதான், நூற் பெயரும், முன்னுரையும், மற்ற விவரங்களு . ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. மற்றப்படி, நூலின் உள்ளுறை-அதாவது பாடல்கள், பிரெஞ்சு மொழியிலேயே இருக்கக் காணலாம். இந்நூலைத் தொகுத்து உருவாக்கியவர் "ஜோசப் ởstum f' (Joseph Chiari D. e s. L. ) arsirusurr. இது, glavsjø Laufsycitem “George G. Harrap & Co Ltd.” என்னும் நிறுவனத்தால் அச்சிட்டு வெளியிடப் பெற்றதால் The (Harrap Anthology என்று வழங்கப்படுகிறது. இலண்டனில் 1958 ஆம் ஆண்டு இந்நூல் முதலாவதாக அச்சிடப்பட்டது. இதன் தொகுப்பாசிரியர் ஒரு நீளமான பெரிய முன்னுரை எழுதியுள்ளார். அந்த முன்னுரையின் உரிமை “பதிவு' செய்யப்பட்டிருப்பதைக் கொண்டு, அதன் அருமை பெருமையை அறியலாம். - இங்கே, இதுவரை நாம் மாதிரிக்காக எடுத்துக் கொண்டுள்ள மூன்று பிரெஞ்சுத் தொகைநூல்களுள் முதலாவது பெரியவர்கட்கு ஏற்றது; இரண்டாவது சிருச் கட்கு உரியது. இந்த மூன்ருவது நூலோ, அனைவர்க்கும் ஏற்ற பொதுவான நூல் என்று தொகுப்பாசிரியரால் முன்னுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவேதான். வகைக்கு ஒரு நூலாக மூன்று நூல்கள் இங்கே எடுத்துக் காட்டப்படுகின்றன. முதலிரண்டு நூல்களும் பிரெஞ்சுக் காரர்கள் படிப்பதற்கு உரியன: இந்த மூன்ருவது நூல் ஆங்கிலேயர்கட்காகத் தொகுக்கப்பட்டது: இப்படியும் ஒரு முறை உண்டு என்பதை அறிவிப்பதாகவே இந்த மூன்ருவது நூல் இங்கே எடுத்துக் காட்டப்படுகிறது. இந்த நூலின் தொடக்கத்தில், பதினேராவது துசற் ருண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப் பிரெஞ்சுத் தொகை நூல்கள் 63 LG&p - 45°sfuñ QLuff Gosfurr & (Anonymous : Eleventh or early Twelfth century) epsy sp. Litrl-coacir stribuliடுள்ளன. அடுத்து, பன்னிரண்டாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்டவையான - ஆசிரியர் பெயர் தெரியாத மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆறு பாடல்களை அடுத்து, எண் பத்தெட்டுப் பாவலர்களின் பாடல்கள் பாவலர் பெயருடன் தொகுக்கப் Ll -Gchen car. gp45& Lorrauguri, ' Richard Coeur De Lion" (1157-99) என்பவர். எண்பத்தெட்டாவது பாவலர், Yves |Bonnefoy' (1923) என்பவராவார் . இந்நூற் பாடல்கள் ஆசிரியர் வாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அடுத்து, நாலாவது மாதிரி நூல் ஒன்றையும் சுவைக் கலாமே! 4. Les Poe" mes De L' Annee 1970 மேலுள்ள நூற்பெயர், 1970 ஆம் ஆண்டுப் பாடல்கள்" என்னும் பொருளைக் குறிக்கிறது. இதனைத் தொகுத்து. வெளியாக்கியவர் செழேர்" (Seghers) என்னும் அறிஞர். இந்த நூலுக்கு 1970 ஆம் ஆண்டுப் பாடல்கள்’ எனப் .ெ ப ய ர் கொடுக்கப்பட்டிருப்பினும், 1968 ایجیئے b ஆண்டு செப்டம்பர் திங்கள் 30 ஆம் நாளுக்கும் - 1969 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாளுக்கும் இடைப் பட்ட ஓராண்டுக் காலத்தில், பல்வேறு இதழ்கள், மலர்கள் முதலானவற்றில் வெளியான பாடல்களே இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூல் 1970 ஆம் ஆண்டு மேத் திங்கள் 15 ஆம் நாள் பாரிசில் அச்சிடப்பட்டு வெளியா யிற்று. 1969 அக்டோபரில் பாடல்கள் தொகுக்கும் வேலையைத் தொடங்கி, 1970 மே 15 ஆம் நாள் அச்சிட்டு வெளியாக்கும் வேலையை முடித்துள்ளனர். ஏறக்குறைய ஏழு அல்லது எட்டுத் திங்கள் காலம் இதற்குச் சரியாய் இருந்திருக்கும். 1968-69 ஆம் ஆண்டுகளில் பாடல்கள் இயற்றப்பட்டிருப்பினும், நூல் 1970 ஆம் ஆண்டில்தான் வெளியாகி அனைவர் கைக்குல் கிடைத்ததால், 1970 ஆம்