பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தமிழ் நூல் தொகுப்புக் கலை சீனத் தொகை நூல்கள் உலகின் மிகப் பெரிய நாடாகிய சைனுவில் வழங்கப் படுவதும், மிகவும் தொன்மையானதும், பிற மொழிகளைவிட மிகுந்த எண்ணிக்கையில் நூல்களைப் பெற்றிருப்பதும் ஆகிய சீன மொழியை விட்டுவிடுவது ஒரு குறைபாடாகிவிடும். தமிழ் நூல் தொகுப்புக் கலேபற்றி நாம் மேற்கொண்டிருக்கும் ஆராய்ச்சிக்கு, சீனத் தொகைநூல்கள் பற்றிய குறிப்பும் உதவி செய்யும். சீன மொழியில் எத்தனையோ தொகை நூல்கள் தோன்றியிருக்கக் கூடும். மாதிரிக்காக ஈண்டு ஒரு சிலவற்றை எடுத்துக் கொள்வோம்: கி. மு. 551 முதல் கி.மு. 479 வரை உயிர் வாழ்ந்த கன்பூவியல் என்னும் தத்துவப் பேரறிஞர், வேதங்கள் போல் சிறப்பாக மதிக்கப்பெற்ற பழைய சீன நூல்களை யெல்லாம் திரட்டி, ஆறு பாகங்களாக வகுத்துத் தொகுத் தார். இந்த ஆறு தொகைகளும் பிற்காலத்தில் குறைத்தும் கூட்டியும் பல மாறுதல்கள் செய்யப்பெற்று, தற்போது பதின்மூன்று பாகங்களாக வகுக்கப்பட்டுள்ளன. இந்தப் பதின்மூன்று தொகுதிகளுக்கும் விளக்கவுரைகள் £ !&? உள்ளன. கன்பூவியசின் தொகை நூல்கள், பல பாடல் களின் தொகுப்பு நூல்கள்போல் இல்லாமல், பல நூல் களின் திரட்டாக உள்ளன. கன்பூவியஸ் திரட்டிய நூல்களுக்குப் பிற்காலத் தில் எழுந்த சீன நூல்கள், மஞ்சு அரசமரபைச் சார்ந்த சியென் - லுங் (Chicn - Lung - (1736-96) என்னும் சீனப் பேரரசனின் ஆதரவில், பதினெட்டாம் நூற்ருண்டின் இடையில், நான்கு பாகங்களாகத் தொகுக்கப் பெற்றன. இவை, நால்வகைத் தொகைநூல்கள் என்று பெயர் வழங்கப் பெறுகின்றன. 1875 - இல், போ - த்சு - ச்சுவான் - ஷ (Po-TzuChuan - Shu') என்னும் நூல் தொகுக்கப் பெற்றது. இது, பழைய சீன மெய்யுணர்வுத் துறை (தத்துவத் துறை) பற்றியதாகும். - எபிரேய, சீனத் தொகை நூல்கள் 83 இவ்வாருகக் காலத்தொறும் சீன மொழியிலும் பல தொகைநூல்கள் தோன்றி வளர்த்து வந்தன. உலகப் பொதுத் தொகை நூல்கள் இதுகாறும், பழம் பெரு மொழிகள் என்னும் காரணத் தால், கிரீக், இலத்தின், சம்சுகிருதம், எபிரேயம், சீனம் ஆகிய ஐந்து மொழிகளிலுள்ள தொகைநூல்கள் பற்றியும் , பிற்பட்டவை யாயினும் இன்று உலகில் பேரரசு செலுத்துவ தாலும், எதிர்கால உலக மொழிகளாய் விளங்கப் போகின்ற மையானும் பிரெஞ்சு, ஆங்கிலம் என்னும் இரு மொழிகளின் தொகைநூல்கள் பற்றியும் ஒரு சிறிது ஆய்த்தோம். இவை போலவே, இத்தாலி, செர்மனி, ரஷ்யன், துருக்கி, அரபு. பாரசீகம், ஜப்பான் முதலிய பல்வேறு மொழிகளிலும் தொகை நூல்கள் பல தோன்றி வளர்ந்து வருகின்றன. எல்லாவற்றையும் பற்றி எழுதப்புகின் எல்லே கடந்து டோகும். இன்னும் கேட்டால், உலக மொழிகள் பலவற் றிலும் உள்ள பல்வேறு இலக்கியங்களையும் பற்றித் தொகுத்து விளக்கும் உலகப் பொதுத் தொகை நூல்கள் சிலவும் இன்று எழுந்துள்ளன. எடுத்துக்காட்டாக, ஃபிலோ எம்.பக் (Philo M. Buck, Jr.) என்பவரால் உருவாக்கப்பட்டதும், நியூயார்க் மாக்மில்லன் நிறுவனத்தால் அமெரிக்காவில் Gausflugu-ji il -t-guerràu. “An Anthology of World Literature என்னும் உலக இலக்கியப் பொதுத் தொகை நூலேக் குறிப்பிடலாம். எனவே, இந்தத் தலைப்பை இம்மட்டோடு நிறுத்தி, உலக மொழிகள் பலவற்றிலுள்ள பல தொகை நால்களைப் பற்றித் தெரிந்து கொண்டதனுல் உண்டான தெளிவை ஒரு துணையாகக் கையிருப்பில் வைத்துக்கொண்டு, தமிழ் மொழியில் நூல் தொகுப்புக் கலை என்னும் அடுத்த கலேப் பிற்குள் புகுவோமாக!