பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. - தமிழ் நூல் தொகுப்புக் கலை ப்ரட்-ப்பட்டனவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நூல்களின் பெயர்களை ஊன்றி நோக்க வேண்டும். முதல் இரண்டு சங்கங்களிலும் இயற்றப்பட்டனவாகக் கூறப்பட்டிருக்கும் நூல்கள் இன்று கிடைக்கவில்லை. கடைச்சங்க நூல்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றுள் முதல் எட்டு மட்டும் இப்போது கிடைத்துள்ளன: இறுதியாகக் குறிப்பிட்டுள்ள 'கூத்து', “வரி", "சிற்றிசை', 'பேரிசை ஆகிய நான்கு நூல்களும் இன்று கிடைக்கவில்லை. முச் சங்கங்கட்கும் உரியனவாகச் சில நூல்களின் பெயர்களைக் குறித்ததோடு உரையாசிரியர் அமைந்துவிடவில்லை; அப்பெயர்களைத் தொடர்ந்தாற்போல், “இத் தொடக்கத்தன” என்று மேலும் கூறியிருப்பது கருதத் தக்கது. இத் தொடக்கத்தன என்ருல், "இவை முதலாய பல நூல்கள்' என்று பொருளாம். உண்மைதானே? முச்சங்கங்களிலும் இருந்த 8,598 புலவர்களும், பன்னிராயிரம் ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான நூல்கள் - நூருயிரக் கனக்கான பாடல்கள் இயற்றி யிருப்பார்களல்லவா? :sa: எல்லாம் வ்கே? என்னவோ - ஒரு சிலவற்றின் பெயர்களாவது தெரியவந்திருப்பது ஒரு பெரும் பேறே! தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுதல்:'அண்மையிலிருந்து சேய்மைக்குச் செல்லுதல் - நிகழ்காலத் திலிருந்து கடந்த காலத் திற்குச் செல்லுதல் - என்னும் உளநூல் முறைப்படி (Phychological Method) sorrub கடைச்சங்க நூல்களிலிருந்து, இடைச்சங்க தலைச்சங்க நூல்களுக்குச் செல்லவேண்டும். கடைச்சங்க நூல்களாகக் குறிப்பிடப்பட்டவற்றுள் 'நெடுந்தொகை நானுாறு: முதலாக "எழுபது பாடல்" ஈருக உள்ள எட்டு நூல்களும் நிகழ் காலத்தில் நாம் நன்கு கற்றுத் தெரிந்து வைத்திருக்கும் நூல் களாகும். இவை இருப்பது உண்மை: பொய்யன்று. இவை போலவே இடைச் சங்கத்தனவாகவும் தலைச்சங்கத்தன வாகவும் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களும் ஒரு காலத்தில் இருந்ததையேயாகும். இ ப் பே ா து கிடைக்காததால், இவற்றை இல்லாத கற்பனை யென்று எவரும் கதைக்க (Pւգ-աՈ՞3մ, கடைச் சங்கத்தனவாகக் கூறப்பட்டுள்ள தொல்காப்பியத்துக்கு முன் 105. வற்றுள்ளும் நான்கு கிடைக்கவில்லையே! கிடைத்துள்ள "நெடுந்தொகை நானுாறு முதலிய எட்டு நூல்களையுங்கூட, சென்ற நூற்ருண்டினர் அறிந்திருக்கவில்லை. இவ் வெட்டும், அண்மைக் காலத்தில்தான் அறிஞர்களால் கண்டுபிடிக்கப் பட்டு அச்சிடப் பெற்று நம் கைகளில் உலவுகின்றன. எனவே முதல் இரண்டு சங்கத்தன வாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள் இருந்தவையே - இந்த இலக்கியச் செல்வங்களே நாம் இழந்துவிட்டோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இனி, தொல்காப்பியத்திற்கு முற்பட்ட தலைச்சங்க நூல்களைப் பற்றி ஒரு சிறிது ஆராய்வோம் : இறையனர் அகப்பொருள் み-Gy)功「。 "அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும் முது நாரையும் முதுகுருகும் களரியாவிரையும் என இத் தொடக்கத்தன” - எனத் தலைச் சங்க நூல்களாக நான்கு நூல்களைப் பெயர் சுட்டித் தெரிவித். துள்ளது. இவற்றை ஒவ்வொன்ருகப் பார்ப்போம் : 1. எத்துணையோ பரிபாடல் 'பரிபாடல்" என வெற்றெனக் கூருமல், எத்துணையோ பரிபாடல்" எனக் கூறியிருப்பது, பல பரிபாடல்களின் தொகுப்பாகிய ஒரு தொகை நூலைக் குறிக்கிறது - என உ ய் த் து ைர ல ா ம். இந்த உய்த்துணர்வுக்குத் தக்க அகச்சான்று உள்ளது. இறையனர் அகப்பொருள் உரை கடைச் சங்க நூல்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள பன்னிரண்டு. நூல்களுள், எழு து பரிபாடல் என்னும் பெயரில் ஒரு நூல் சுட்டப்பட்டிருப்பதைக் காணலாம். இந்த நூல் இப்போது கிடைக்கப் பெற்று நம் கையில் உலவி வருகின்ற 'பரிபாடல்" என்னும் தொகை நூலாகும். இஃது, பலர் பாடிய எழுபது பரிபாடல்களின் தொகுப்பு என்பது தெரிந்த முடிபு. கடைச்சங்க நூலாக எழுபது பரிபாடல்' என்பதைக் கூறியுள்ள உரையாசிரியர், தலைச்சங்க நூலாக எத்துணையோ பரிபாடல்’ என ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார் எனில், எழுபது பரிபாடல்களின் தொகுப்பாகிய கடைச்சங்கத் தொகை நூல் போலவே, கிடைக்கப் பெருமையால் எண்ணிக்கை.