பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii முதற்சங்க இடைச்சங்க காலத்து இருந்தனவாக உண்ர்: - யாசிரியர்கள் குறிக்கும் முதுநாரை, முதுகுருகு, களரியா, வின்ர வெண்டாளி. வியாழமாகல முதலியில்வெதாகைநூல். களாக இருக்கக்கூடுமோ என்று சுந்தர சண்முகளுர் பார்க்கும் நுண்பார்வை இனியது, ஏற்றது. பன்னிரு படலம் பற்றிய ஆய்வும், வெட்சிப் படலத்தைத் தொல்காப்பியனரே எழுதி' ஞர் என்ற கருத்துக்கு அரளுன காரணங்களும் நிலையத் தக்கவை. . . . பத்துப்பாட்டு எட்டுத்தொகை பற்றிய தலைப்புக்களில், ஆராய்ச்சி செய்ய விழைவார்க்கு உரிய குறிப்புக்கள் பல்கிக். கிடக்கின்றன. பல்வேறு குறிப்புக்களைத் தொகுத்த அளவில் . ஆசிரியர் அமைந்திலர்: நன்முடிபுகளையும் அந்தியிட் முய்ன்' மள்ளார். குறுந்ெதாகையில் ஒன்பது அடியோடு கூடுதலாகக் கைாணப்படும் ஒரு பாடலே நற்றிணையில் சேர்த்துப் பின்னதன் ' குறைவை ஒழுங்குபடுத்தலாமே என்ற சண்முகளுரின் கருத். துரை ஏற்கத்தக்கதே. ஆசிரியர் சுந்தர சண்முகளுரின் கல்வி வளமும் அறிவு: வன்மையும் நகைச்சுவையோடு ஆராய்ச்சியை வழங்கும். எளிய நடையும் பாராட்டுதற்கு உரியவை. தமிழ்ச் செல்வமும் தமிழாய்வும்.இந் நூலால் பெருகியுள்ளது. கண்டு,ஆசிரியர் r தொண்டினப் பாராட்டுவோமாக. ------ - - - - அண்மைலே நகர் 象,町 G } வ. சுப. மாணிக்கம். 12–10–1972 “ தமிழ் நூல் தொகுப்புக் கலை” ஆசிரியர் முன்னுரை தொகை நூற் செல்வம் : தமிழ் மொழியில் தொகைநூல் செல்வத்திற்குக் குறைவே. யில்லை. வியப்படைய வேண்டா உண்மை. அன்றுதொட்டு இன்றுவரை தமிழில் ஏறக்குறைய இரண்டாயிரம் தொகை நூல்கள் தோன்றியுள்ளன எனலாம். தொகைநூல் என்பது, பலகாலத்தில் பலபொருள் பற்றிப் பலரால் பாடப்பெற்ற உதிரிப் பாடல்கள் பலவற்றுள் சிறந்தனவற்றைத் தேர்ந் தெடுத்து ஒரு நூல் வடிவில் தொகுக்கப் பெற்றிருப்பதாகும். பழம்பெருந் தொகை நூல்கள் இத்தகையனவே. ஒரே புலவர் பல பொருள் பற்றிப் பலபொழுதுகளில் பாடிய பாடல்களின் தொகுப்புக்களும் தொகை நூல்களின் வரிசையில் இப்போது இடம்பெற்று வருகின்றன. தொகுப்புக் கலை : பல்வேறு உதிரிப் பாடல்களை உரிய தொடர்புபற்றி ஒரு. நூலாகத் தொகுப்பது ஒர் அரிய கலேயாகும். இதன் அருமை