பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

区

- தம்முடைய ஆசிரியரை ஐயரவர்கள் சொல்லும் இடங்களிலெல்லாம்

எத்தனே பக்தியும் நன்றியறிவும் பெருக்கெடுத் தோடுகின்றன !

எண்ணிய பலவும் மாணவர்க் கன்பின்

ஈந்திடும் நிதிதமிழ் விளங்க நண்ணிய புகழ்மீ ட்ைசிசுந் தரநன்

ஞவலன் நன்கினி தாய்ந்து பண்ணிய விதி விடங்கர்தம் ஆடற்

பனுவலைப் பதிப்பிக்க இயைந்த புண்ணிய மதனை நினைதொறும் எனது

புந்திமிக் கின்புறு மாலோ ' (376)

என்று பாடிக் கசிந்ததும்,

அருத்திமிக என அருகில் இருத்தியருந் தமிழ்நூல்கள் அறைந்து பின்னர்த் திருத்துறைசை அமர்ந்தருள்சுப் பிரமணிய

அருட்கடலின் திருமுன் சாரப் பொருத்திஅனை யான்கருணைக் கிலக்காக்கி இருபயனும் பொருந்தச் செய்தோன் மருத்தபொழிற் சிரகிரிவாழ் மீனுட்சி

சுந்தரநா வலவர் ஏறே" (665)

என்று பாராட்டியதும், தம் தங்தையார் மறைவு குறித்துப் புலம்பிய புலம் பலில், -

பற்றலெங்கே செந்தமிழைப் பற்றிக்கற் றேர்பலர்பால் துற்றலெங்கே மீளுட்சி சுந்தரநல் லாரியன்பால் கற்றலெங்கே கற்றுக் கவலையொரீஇ அவ்வழியில் o - நிற்றலெங்கே இன்றுவரை நீயருள்செய் யாவிடினே" (705)

என்று உருகியதும் அந்தப் பண்புகளைத் தெளிவாக்கும்.

தமிழே ஐயரவர்களுடைய உணவு , தமிழே அவர்களுடைய மூச்சு ; தமிழே அவர்களுடைய உயிர் ஒருசமயம் பொறுக்க இயலாத மனவருத்தத் தில் அவர்கள் ஆழ்ந்திருந்தார்கள். அப்போது, இவ்வுலகில் காம் ஏன் வாழ வேண்டும்? இந்த உயிரைப் போக்கிக் கொண்டு விடலாமே!’ என்ற எண் ணங் கூட உண்டாயிற்று. உயிரை விட எண்ணியும் தமிழை விட மனம் இல்லை. அப்போது அவர்கள் உள்ளத்துணர்ச்சி ஒரு பாடலாக உரு வெடுத்தது: -

தேனிருக்கும் சுவைத்தமிழே சிரியர்நாப்

பயிலமுதத் தெளிவே இந்த ஊனிருக்கும் துயராலும் உள்ளொன்று

புறமொன்றாம் உலக ராலும் ஏனிருக்க வேண்டுமென எண்ணுகின்றேன்;

நினைப்பிரிய எண்ண மில்லேன் ; - - . . மானிருக்கும் கரதலத்து வள்ளலருள்

வழங்கியிடர் மாய்த்தாள் வாயே! (201).