பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi

ஆம்; ஐயரவர்களுக்கு உயிரினும் சிறந்தது தமிழ். அதல்ை அல்லவா அவர்கள்,

இருந்தமிழே உன்னுல் இருந்தேன்; இமையோர் விருந்தமிழ்தம் என்றலும் வேண்டேன் - திருந்த உதிப்பித்த பன்னூல் ஒளிர அடியேன் பதிப்பிக்க வேகடைக்கண் பார்" (379)

என்று பாடினர்கள்?

இந்த உணர்ச்சியைத் தமிழன்பு என்பதா? தமிழார்வம் என்பதா ? தமிழாசை என்பதா ? அல்லது தமிழ்ப்பெரும் பேராசை என்பதா ? எப்படிச் சொன்னுலும் அதுதான்் இந்தத் தமிழ்ப்பெரும் பேராசிரியர் வாயிலாகத் தமிழ் மகளும் தமிழ் மக்களும் அரிய தமிழ்ச் செல்வம் பல வற்றைப் பெறக் காரணமாயிற்று என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

" காந்தமல்" ) கி. வா. ஜகந்நாதன் சென்னை - 28 6-62.س-8 س