பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

தமிழ்ப்ப்ா மஞ்சரி

புனலாற் பலநூல் கனலாற் பலநூல் அழித்தே காலங் கழித்தனர் சிலரே ; இன்புறு தமிழிடை அன்புவைத் திருந்தும் பெயர்ப்பித் தெழுத அயர்த்தனர் சிலரே ; இக்கா ரணத்தால் மிக்கார் புகழும் எத்தனே நூல்கள் இறந்தன அவைதாம் இத்தனை என்ன எண்ணப் படுங்கொலோ ? இறவா நூல்களேத் துறவா தெழுதிப் படித்தும் பிறரைப் படிப்பித் தும்பல பாடியும் அச்சிற் பதிப்பித் தும்மிதைப் பாலனம் செய்த மேலவர் பலரின் சரித்திர மதனே விரித்திடிற் பெருகும் ; இவ்வியல் பிற்ரும் இம்மொழி முன்னுள் நம்புறு கும்ப சம்பவ ராற்புரி இலக்கண முடைத்தாய் இருத்தலின் இந்நாள் மாணமை கும்ப கோணகன் னகர்வாழ் உங்களாற் காத்தற் குரிமையும் உடைத்தால் : ஈங்கிது நிற்க: தூங்கல் இலாது - தம்மொழி அன்றி எம்மொழி களுமே விருத்தி பெறச்செய் கருத்துடை யவரும் தினந்தொறும் புதுமையைத் தெரித்தே நம்மவர் மனங்தொறும் அறிவை வளர்த்திடு ப்வரும் அன்புடையவரும் ஆகிய இந்தத் துரைத்தனத் தார்செயல் உரைக்கடங் குவதோ ? இவர்திற முங்கட் கியம்பிட நானுர் ? இக்கா லத்தும் புக்கா தரவொடு நவமுறும் இவர்மொழி நாள்பல முயன்று கற்ருே ரன்றி மற்ருேர் முன்னே நிலைமையி னின்று நீங்கினர் அல்லர் ; விதம்வித மாவுறு புதுமைகள் பலவும் கண்ணிற் கண்டு களிப்பதை அன்றி எண்ணிச் செய்வலி இயைகின் ருரலர் ; அப்போ தப்போ தரசர்பால் உறுவன

71. கும்பசம்பவர் - அகத்தியர்.

60

7()

?5

80

85

90