பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

தமிழ்ப்பா மஞ்சரி

வீரச் சிறப்பை ஆரத் தெரிப்பவும் இல்லற மாகிய நல்லறம் உரைப்பவும் துறவற மதனத் திறவிதின் தெரிப்பவும் மிடித்துன் பத்தை எடுத்துரைப் பனவும்

வண்மையும் தண்மையும் உண்மையும் திண்மையும்

என்னும் இவற்றைப் பன்னுகின் றனவும் அளியையும் ஒளியையும் தெளிவுறுப் பனவும் தம்மைப் புரங்தோர் தாமாய்ந் திடவே - புலவர்கள் புலம்பி அலமரல் தெரிப்பவும் நட்பின் பயனை நன்கியம் புகவும் - கல்விப் பயனைக் கட்டுரைப் பனவும் நீர்நிலை பெருக்கென நிகழ்த்துகின் றனவும் மானங் தன்னேத் தாம்கன் குரைப்பவும் இளமையும் யாக்கையும் வளமையும் கிலேயா என்றே இசைத்து கன்றேய்ப் பனவும் அருளுடை மையினே மருளறத் தெரிப்பவும் தரமறிக் தொழுகென் றுரனுற விதிப்பவும் அவாவின் கேடே தவாவின் பென்பவும் இனியவை கூறல் கணிகலன் என்பவும் உழவின் பெருமையை அழகுற உரைப்பவும் நன்றி அறிக என்றிசைப்பனவும் கொடுங்கோன் மையினை விடுங்கோள் என்பவும் தவத்தின் பெருமையைத் தவப்பகர் வனவும் மடியெனும் பிணியைக் கடிமின் என்பவும் கொலேயெனும் பகையைத் தொலைமின் என்பவும்

நல்லேர்ர்ப்புணர்ந்து புல்லோர்த் தணந்து தாழ்வொன் றின்றி வாழ்மின் என்பவும்

சுற்றம் புரக்கும் நற்றிறம் உரைப்பவும்

கற்பின் திறத்தைக் கற்பிப்பனவும்

மக்கட் பேற்றின் மாண்புரைப்பனவும் கணவனே இழந்த மணமலி கூந்தலார்

தீப்பாய் செய்தி தெரிவிப் பனவும் கைம்மை விரத வெம்மை விரிப்பவும்

30

35

40

45

50