பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே

மு. க வு ைர

திங்களனி சடைப்பெருமான் திருநாமம் மறவாத

சிந்தை கொண்டோன்

சங்கமலி நூல் மீண்டும் தண்டமிழ்த்தாய் பூணும்வகை

சமைத்த வள்ளல்

துங்கமுறு தன்னடிக்கீழ் எனயுமடி மைகொண்டு

தொன்னுல் ஈந்த

அங்கணன் அந் தண்சாமி நாதகுரு பேரருளை

அடைந்துய்ந் தேனே.

உரிமை வாழ்வைப் பெற்ற பாரத காட்டில் பதின்ைகு மொழிகள் தேசீய மொழிகள் என்னும் தகுதியைப் பெற்றுள்ளன. அந்த அந்த மாநிலங் களில் வழங்கும் மொழிகளின் வரலாற்றை ஆராய்ந்தால், தமிழைப்போன்ற தொன்மையை உடையதாக வேறு எந்த மொழியும் இல்லே என்பது தெளி வாகும். மிகப் பழங்காலத்தில் புலவர்கள் இயற்றிய நூல்களைத் தமிழ் பெற்றிருக்கின்றது. வெறும் தொன்மைப் பண்பு மட்டும் உடையன அல்ல அவை : இனிமையும் உரனும் இன்றும் கலந்தரும் பயனும் உடை யனவாக அவை விளங்குகின்றன. தமிழ் மக்களின் உள்ளத்து உயர்வும் மொழிவளமும் செயற்சிறப்பும் அந்த நூல்களால் புலனுகின்றன. அந்தப் பழைய நூல்களேயே சங்க நூல்கள் என்று காம் போற்றி வருகிருேம்,

அத்தகைய சங்க காலத் தமிழ்ச்சோலே இடையிலே பல காலம் இருப் பது தெரியாமல் இருள் மண்டிக் கிடந்தது. அதனே மீட்டும் மலரவும் கணியவும் வைத்துத் தமிழ் காட்டில் சங்கத் தமிழ் மனமும் சுவையும் பரவ வைத்தவர்கள் மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள். கருவிலே தமிழுடைய அவர்கள் இளமை தொடங்கியே தமிழ்க்காதல் மிகுதியாகப் பெற்றிருந்தார்கள். அதனல் பல பல புலவர்களே அண்டிப் பாடம் கேட் டார்கள். ஒரு பர்ட்டை மட்டும் சொன்னவர்களிடமும, சில நூல்கள் முழு வதையும் கற்பித்தவர்களிடமும் அன்பும் பணிவும் பூண்டு கற்ருர்கள். அவர்களுடைய தமிழ்ப்பசி ஆனேப்பசியாக இருந்தமையால் இளமையில் அவர்களுக்குப் பாடம் சொன்ன புலவர்களால் அவ்வேட்கையைத் தணிக்க முடியவில்லை. கடைசியில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்கள யவர்களே அவர்கள் அணுகிப் பாடம் கேட்கலானர்கள். அதன் பிறகே அவர்களுட்ைய தமிழ்ப்பசி அடங்கத் தொடங்கியது. கல்வியிற் சிறந்து நின்ற பிள்ளையவர்கள் கவிச் சக்கரவர்த்தியாகவும் விளங்கினர். அக்காலத் தில் தமிழ் நாட்டில் உலவிய நூல்களில் அந்தப் புலவர் பெருமான் அறியாத நூல் ஏதும் இல்லை. அத்தகைய கற்பகத்தின் பேரன்புக்கு இலக்காகி ஐயரவர்கள் தமிழ் அமுதை நுகர்ந்தார்கள்.

கம்பராமாயணமும், புராணங்களும், பிரபந்தங்களுமே அக்காலத்துத் தமிழ்ப் பூஞ்சோலையாக விளங்கின. நன்னூலே சிறந்த இலக்கணமாக மதிக்கப்பெற்றது. கல்லாடம் படித்துவிட்டால் அவன் பெரிய புலவன். 'கல்லாடம் படித்தவைேடு சொல்லாடாதே" என்று ஒரு பழமொழிகூட எழுந்தது - . . - -

மகாவித்துவான் பிள்ளையவர்கள் காலத்துக்குப்பின் சில ஆண்டுகள் தமிழ் மாணவராகவே இருந்த ஐயரவர்கள் வித்துவான் சி. தியாகராச செட்டியாருடைய தாண்டுதலால் கும்பகோணம் அரசினர் கல்லூரியில்