பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

தமிழாசிரியப் பணியை மேற்கொண்டார்கள். அங்கே இருந்தபோது தமிழ்நாடு செய்த கல்வினேப் பயனுகச் சங்க நால் ஆராய்ச்சியில் தலைப் படும் வாய்ப்பு உண்டாயிற்று.

அவர்கள் கற்ற தமிழ் நூற்பரப்புக்கும், ஆராயப் புகுந்த சங்க நாற்பரப்புக்கும் பலபல வேறுபாடுகள் உண்டு. ஆயினும் இடைவிடா முயற்சியின லும் இறைவன் திருவருளாலும் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்த துபோல அவர்கள் அந்தப் பழைய நூல்களேத் தெளியவும் பிறரும் தெளியும் வகையில் அச்சிடவும் முடிந்தது. இன்று தொடக்கப் பள்ளியில் பயிலும் இளஞ்சிறனும் பாரியைப் பற்றியும் இளங்கோவடி களேப்பற்றியும் தெரிந்துகொள்ளும் வகையில் அவர்கள் செய்த தொண்டு பரந்தது.

மாளுக்கராக வாழ்ந்தபோதும், ஆசிரியராக இருந்தபோதும், ஆராய்ச் சியில் ஈடுபட்டபோதும் அவர்களுக்குக் கவிஞர் பலருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்கள் காலத்தில் மிகச் சிறந்த கவியரசராக விளங்கினவர் மகாவித்துவான் பிள்களயவர்கள். அப்புலவர் பெருமானுடைய மாளுக்க ராக இருந்த காலத்தில் அவரிடமிருந்து கவிவெள்ளம் எவ்வாறு பெருக் கெடுத்துவந்ததென்பதை ஐயரவர்கள் நேரிலே உணர்ந்தார்கள். நூற்றுக் கணக்கான நூல்களைப் பாடம் கேட்டதல்ை தமிழின் பல துறைகளும் அவர்களுக்கு எளியன ஆயின. இவற்றிற்கும் மேலாகச் சங்க நூல்களே ஆராயும் தொண்டை மேற்கொண்டதனல் சங்ககாலக் கவிஞர்களின் வாக்கில் ஆழும் வாய்ப்பு, மற்றவர்களுக்குக் கிடைக்காத வகையில் அவர் களுக்குக் கிடைத்தது. இவ்வாறு பலவகைப் புலவர்களின் நூல்களிலே பயின்று சங்க காலமுதல் தாம் வாழ்ந்த காலம் வரையிலுள்ள கவிஞர் களின் திறத்தை நன்கு உணர்ந்தவர்கள் ஐயரவர்கள். - -

இக்காலத்தில் நூல்பயில் அறிவும், செய்யுள் இயற்றும் வன்மையும் ஒருங்கே ஒருவரிடம் காண்பது அரிதாக இருக்கிறது. நூலறிவுடைய வரைப் புல்வரென்றும், கவி பாடுபவரைக் கவிஞரென்றும் சொல்லு கிருேம். புலவரல்லாத கவிஞரையும், கவிஞரல்லாத புலவரையும் இன்று பார்க்கலாம். ஆனுல் முற்காலத கில் புலவர் யாவரும் கவிஞரே. ஐயரவர்கள் தமிழ் பயின்ற காலத்தில் தமிழிற் புலமையுடையவர்களிற் பெரும்பாலோர் கவிபாடும் ஆற்றலப் பெற்றிருந்தார்கள். தமிழ் பயிலும் மாணுக்கர்கள் கவி பாடியும் பழகினர்கள். - .

இந்த மரபில் வந்த ஐயரவர்கள் இளமை தொடங்கியே கவிகளைப் பாடும் பயிற்சியை வளர்த்துக்கொண்டு வந்தார்கள். அவர்களுடைய தமிழறிவு ஏற ஏற அவர்களுடைய கவிகளில் அந்த அறிவின் மணம் செறிய லாயிற்று. நாள்தோறும் தேவார டாராயணம் செய்யும் வழக்கம் அவர்கள் பால் இருந்தது. எப்போதும் சிவகாமத்தை ஜபித்துக்கொண்டே இருப் பார்கள். கின்றும் இருந்தும் கிடந்தும் அந்த காம ஜபத்தில் ஈடுபட்டிருப் பார்கள். அவர்களுடைய சிவபக்தி சிறந்ததா, தமிழ்ப்புலமை சிறந்ததா என்று எடை போட்டுப் பார்த்து வரையறுக்க இயலாது. -

இளமை தொடங்கியே அவர்களுடைய சிவபக்தியும் தமிழறிவும் இனந்தே வளர்ந்து வந்தன. மலருக்கு கிறமும் மணமும் தனித்தனியே வந்து அமைவதில்க்ல. இரண்டும் ஒருங்கே வளர்கின்றன. அவ்வாறே ஐயர்வ்ர்களிடம் சிவபக்தியும் தமிழ்ப்புலமையும் வளர்ந்தன. அதன் பயனுக அவர்கள் இயற்றிய கவிகளில் அவ்விரண்டும் மணந்தன. - --