பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W

ஐயரவர்களுடைய நற்பண்புகள் பலரை அவர்கள்பால் ஈர்த்தன : புலமையும் பலரை இழுத்தன. செல்வர்களும், பேராசிரியர்களும், புலவர் களும், அதிகாரிகளும் அவர்களுக்கு கண்பர்களாயினர். மடாதிபதிகளும் வள்ளல்களும் அவர்களுக்கு உதவி செய்தார்கள். தமக்குச் சிறிதளவு உதவி செய்தாரையும் மறவாமல் கன்றியறிவு கூர்வது ஐயரவர்களுடைய பண்பு. அவர்களுடைய சிவபக்திக்கும் தமிழறிவுக்கும் அடுத்தபடியாக அவர் களிடம் கிரம்பியிருந்த பண்பு செய்க்கன்றியறிவு. பக்தியிஞல் அவர்கள் பாடிய பாடல்கள் பல அப்படியே நன்றியறிவில்ை அவர்கள் பாடிய பாடல்களும் பல. -

சிலர் இறைவனைப் பாடுவதுதான்் பாட்டென்றும் மக்களைப் பாடுவது பாட்டாகாதென்றும் கூறுவதுண்டு. கரஸ்துதி” என்று எளிதிலே பல பாடல்களைப் புறக்கணித்து விடுவார்கள். அப்படியாளுல் சங்க காலத்து நூல்கள் யாவும் பயனற்றவையா ? இதுபற்றி ஐயரவர்களுடைய உறுதி யான கருத்தை காம் தெரிந்துகொள்வது இன்றியமையாதது. ஒருவரிடம் ஒன்றைப் பெறுவதற்காக அவரை இந்திரனென்றும் சந்திரனென் றும் வானளாவத் தாக்கி வைத்துப் பாடுவதுதான்் வீண் புகழ். ஒருவர் செய்த உதவியை கினேந்து பாராட்டுவது அத்தகையது அன்று ; அது கன்றி யறிவுக்கு அறிகுறி. - . -

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் ; உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு " .

என்பது பொதுறை. கல்ல மனிதன் கன்றியறிவைக் காட்ட முற்பட்டால் தன்னுடைய ஆற்றலுக்கு ஏற்ற வகையில் அதைக் காட்டுவான். மொழி வளம் படைத்த புலவர்கள் கவியாற்றலால் அதனைப் புலப்படுத்துவார்கள். அப்படி எழுங்தவையே பலபல சங்கப் பாடல்கள். ...

மனிதன் செய்த உபகாரத்தை நன்றியறிவுடன் நினைக்கத் தெரியாத வன், இறைவன் பேரருளே கின்ேக்கும் ஆற்றல் எவ்வாறு பெறுவான் ? ஆகவே சிறிய உபகாரம் செய்தாலும் அது செய்தவரைப் பாராட்டுவதே சிறந்த மனிதப் பண்பு என்ற கருத்துடை வர்கள் ஐயரவர்கள். இந்தப் பண்பு அவர்களிடம் எப்படி மிக மிகச் சிறந்து விளங்கிய தெனபதை அவர்களோடு பழிகியவர்கள் நன்கு அறிவார்கள் : அவர்கள் வரலாற்றை "என் சரித்திரத்"திலே ப்டித்தவர்களும், அவர்களுடைய நூற் பதிப்பின் முகவுரைகளே ப் படித்தவர்களும் இந்தப் பண்பு அவர்களிடம் நிரம்பியிருந்ததென்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளலாம். அவர்கள் இயற்றிய கவிகளிலும் இந்தப் பண்பு தேங்கியிருப்பதை உணரலாம்.

ஐயரவர்களுடைய கவிகளைக் கால அடைவு கோக்கி மூன்று வகை யாகப் பிரிக்கலாம். இளமைக் காலத்தவை, பிள்ளேயவர்களிடம் சேர்ந்த பிறகு பாடியவை, பிற்காலத்தில் பாடியவை என்று அவற்றைப் பிரிக்கலாம். பொருள்வகையால் பார்த்தால் அவர்களுடைய பக்தி உண்ர்ச்சியைக் காட்டுவன ஒருவகை நன்றியறிவைக் கர்ட்டுவன மற்றொரு வகை. பக்திப், பனுவல்கள் தமிழ்ப்பா மஞ்சரியின் முதல் பாகமாக வெளிவந்துள்ளன. மற்றவை இப்போது இந்த இரண்டாம் பாகமாக வெளிவருகின்றன.

ஐயரவர்கள் இளமையில் பாடியவை எளிய நடையில் புலமையின் மிடுக்கில்லாமல் உள்ளன், பிள்ளேயவர்களிடம் சேர்ந்து தமிழின் விரிவை அறிந்த பிறகு பாடியவையோ வரவரச் சொற்செறிவும் பொருட்செறிவும்