பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தமிழ்ப்பா மஞ்சரி

(வெண்பா)

498, வாழ்சுப் பிரமணிய வள்ளல்கரு ணேக்கடலில்

ஆழ்குமர சாமிமுனி ஆண்டகையே-தாழ்வில் கரபாத் திரமுனிவன் காவளர்த்தற் குன்போல் வரபாத் திரமார்தான்் மற்று. (8)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

499, திருவென்றும் நின்ருெளிரும் துறைசையிற்சுப்பிரமணிய

தேவற் கன்பிற் பொருவென்றும் இன்றியொளி ருங்குமர சாமிமுனி

புங்க வன்முன் * - மருவென்றும் வெளிக்கிலேயென் பார்காணத் தில்லைவெளி

மன்றில் மேனி . அருவென்றும் உருவென்றும் சொலகடிப்பார்க் கின்றுமரு அளித்தான்் மன்னே. (8)

(தரவு கொச்சகக்கலிப்பா) 500 பூமணக்கும் பொழில்மணக்கும் பொன்னி வளநாட்டிற்

காமணக்குங் திருப்பனசைக் கடிநகரங் தனிபுரப்போன் பாமணக்கும் புலவர்கள்செக் காமணக்கும் பலவிசையான் சேமணக்குங் தேமணக்குஞ் சிந்தையுளான் கிந்தையிலான். 498. திருவாவடுதுறையில் மருதமரச் சாலையின் கீழ்புறத்தே உள்ள கரபாத்திரசுவாமிகள் கந்தவனம் சிதைந்த பொழுது தம்பிரான் தென்ன மரம் வைத்துப் பயிராக்கியதைப் பாடியது. .

499. சிதம்பரத்தில் எழுந்தருளிய இறைவன் ஆகாசமே திருமேனியாக உடையவன். ஆகாசத்திற்கு ஒலி உரியதே யொழிய மரு (மணம்) இல்லை. யென்று ஆன்ருேர் கூறுவர். அவர்கள் காணமுறக் குமாரசாமித் தம்பிரான் ஆகாச வடிவினராகிய சிவபெருமானுக்கு மருவை அளித்தார் என்பது கருத்து.பொரு ஒப்பு, மரு மணம் வெளிக்கு - ஆகாயத்துக்கு. மரு. மருவென்னும் இலே. . • * *

500. இதுமுதல் ஆறு பாடல்கள் திருப்பனந்தாளில் தலைவராக இருந்த இராமலிங்கத் தம்பிரான் அவர்கள் தமக்குச் சின்னப்பட்டத்தில் இவரை அமர்த்திய போது (1880-ஆம் ஆண்டு) பாடியவை. . . . . .

கா - சோல். கடி-காவல். சே மணக்கும் - செம்மையையுடைய, இது . இராமலிங்கத் தம்பிரான் புகழைச் சொல்லியது.