பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற் 63. அகவல்களையும் படிக்கும்பொழுதன்றே விளங்கும். கல்லாடத்தின் பொருட் சுவையைப் பற்றி விவரித்தற்கு இது தருணமென்றாதலின் விடுத் தொழிவோம். இவருடைய உரையில் இன்ன பாகம் உபயோக மற்றது என்று தள்ளுதல் முடியாது, இவர் இடைப்பிற வரலாகக் கொண்டு அநேக அகவல்களிற் கஷ்டமான பாகங்களை அர்த்த புஷ்டி நன்கு தோன்றுமாறு விலக்கணம் தந்துரைத்தும், துறைகளொடு அகவலின் தாற்பரியங்களைப் பொருத்திக்காட்டியு மிருக்கின்றனர். இக்கல்லசடவுரையைப் படித்து ஆகக் தித்தல் - தமிழ் கற்பார் யாவர்க்கு மிகவு மாவசியகமான காரியம். . இனி பிந் நாற்றாண்டுப் புலவரொருவர் சுப்பராய உபாத்தியாயர் என்பார் - 37-வது அகவற்கு மேல் 60 அகவல்களுக்கு ஏகதேசம் நமது மயிலேறும் பெருமாள் பிள்ளை யுரையைத் தழுவி யுரைசெய்து இரண்டையுஞ் சேர்த்துப் பதினைந்து இருபது வருடங்கட்கு முன்னர் அச்சிட்டிருக்கின்றனர். எஞ்சி யுள்ள மூன் றகவல்களுக்கும் பொருள் தெரிந்திலலாம். இதினின்று மொரு பாகம் விசேஷமாய்த் திராவிடத்தில் எம். ஏ. பரீட்சைக்குப் போகிறவர்களுக் குப் பாடமாக நியமிக்கப்பட்டு வருதல் ஆங்கிலம் பயின்ற தமிழ் மாணவர்கட் குத் தெரிந்திருக்கலாம். 6. சுவாமிநாத தேசிகர் - சுவாமிநாத தேசிகர் என்னும் நாமதேயத்தையுடைய இம்மகா பண்டிதர் பாண்டிவள நாட்டிலே வேளாளர் குலத்திலே பிறந்தவர். இவர் கல்விக்களஞ் 'சியமாகவும், கருணை முதலிய சற்குணங்களுக்கு ஆகா மாகவும் விளங்கியவர் . இவர், மயிலேறும் பெருமாள் பிள்ளையவர்களுடைய மாணாக்கரென்று காட்டி யிருக்கிறோம். இவருடைய மதமோ சைவ மதம் இவர் பரம்பரைச் சித்தாந்த சைவர் மரபினர். இவர் இளமைப் பருவத்திலேயே துறவறப் பிரதியுடையவராதலின், திருக்கைலாச பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்தைச் சார்ந்து, அப் பொழுது, அவ் வாதீனத்தில் ஞானதேசிகராக வீற்றிருந்த ஸ்ரீமத் அம்பல வாண தேசிகரிடம் சிவ தீக்ஷை பெற்று விளங்கியவர். இஃது, இலக்கணக் கொத்துப் பாயிரத்துள், தீக்ஷா குருவணக்கம்” எனத் தலைச்சாத்திட்டு மூன் றாவது விதியா க, . 46 ஊரும் பேரு முருவு மில்லா னாயினுந் திருவா வடுதுறை யூரணைக் தம்பல வாண னெலும்பெய ராதரித் தறிவே யுருவா யமர்ந்தகுரு ராயனைப் பொறையுடல் போகப் புகழ்ந்தடி போற்றுவாம்,' 41 என்று கூறப்பட்டிருப்பதனாலே நன்கு விளங்கும். மேலும் . மிவ்வாசிரியர்