பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தமிழ்ப் பழமொழிகள்


அகமுடையான் அடித்ததற்குக் கொழுநனைக் கோபித்துக் கொண்டாளாம்.

(பா-ம்.) மைத்துனனை,

அகமுடையான் அடைவானால் மாமியார் மயிர் மாத்திரம்.

அகமுடையான் இல்லாத புக்ககமும் அம்மா இல்லாத பிறந்தகமும்.

அகமுடையான் இல்லாத வெட்கம் அடுத்த வீட்டுக்காரனுக்கா?

அகமுடையான் அடித்தது உறைக்கவில்லை; அடுத்தகத்துக்காரன் சிரித்ததுதான் உறைக்கிறது. 110

அகமுடையான் அடித்தது பாரம் இல்லை; கொழுந்தன் சிரித்தது பாரம் ஆச்சு.

(பா-ம்) தப்பு. இல்லை,

அகமுடையான் அடித்தது பெரிது அல்ல; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன்.

அகமுடையான் அடித்தாலும் அடித்தான்; கண் புளிச்சை விட்டது.

(பா-ம்) பீளைவிட்டது. அழுததனால் அப்படி ஆயிற்று.

அகமுடையான் கோப்பு இல்லாக் கூத்தும் குரு இல்லா ஞானமும் போல் இருக்கிறான்.

அகமுடையான் சாதம் ஆனைபோல் இருக்கும்; பிள்ளை சாதம் பூனை போல் இருக்கும், 115

அகமுடையான் செத்த போதே அல்லலுற்ற கஞ்சி.

அகமுடையான் செத்தவளுக்கு மருத்துவச்சி தயவு ஏன்?

அகமுடையான் செத்து அவதிப்படுகிறபோது அண்டை வீட்டுக்காரன் அக்குளைக் குத்தினானாம்.

அகமுடையான் திட்டியதைப் பற்றி அடுத்த வீட்டுத் தச்சனைக் கோணல் நிமிர்த்தச் சொன்னாளாம்.

அகமுடையான் திடம்கொண்டு குப்பை ஏறிச் சண்டை கொடுக்க வேணும். 120

அகமுடையான் பலமானால் குப்பை ஏறிச் சண்டை போடலாம்.

(பா-ம்.) பலம் உண்டானால்.

அகமுடையான் பெண்டாட்டியானாலும் அடுப்புக்கட்டி மூணு.

அகமுடையான் வட்டமாய் ஓடினாலும் வாசலால் வரவேண்டும்.

அகமுடையான் வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது; அடிப்பானோ என்ற பயமும் இருக்கிறது.

அகமுடையான் வைததைப்பற்றி அசல் வீட்டுத் தச்சனைக் கோணல் நிமிர்த்தச் சொன்னாளாம். 125