118
தமிழ்ப் பழமொழிகள்
ஆறும் நாலும் பத்து; நாலும் ஆறும் பத்து. 2710
ஆறு மாசப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா?
ஆறு மாசம் பழுத்தாலும் விளா மரத்தில் வௌவால் சேராது.
ஆறு மாதத்துக்குச் சனியன் பிடித்தாற் போல.
ஆறு மாதத்துக்கு வட்டி இல்லை; அப்புறம் முதலே இல்லை.
ஆறு மாதம் வீட்டிலே; ஆறு மாதம் காட்டிலே. 2715
ஆறுமுக மங்கலத்துக்கு ஆர் போனாலும் சோறு உண்டு போங்கள், சொன்னேன்; சொன்னேன்.
- (சோறு கொண்டு; ஆன்டான் கவிராயர் கூற்று.)
ஆறு வடியும் போது கொல்லும்; பஞ்சம் தெளியும் போது கொல்லும்.
- (கருப்பு.)
ஆறு வடிவிலேயும் கருப்புத் தெளிவிலேயும் வருத்தும்.
ஆன காரியத்துக்கு மேளம் என்ன? தாளம் என்ன?
ஆன குலத்தில் பிறந்து ஆட்டை மாட்டை மேய்க்காமல் ஓலைவாரியாய்ப் போனானே! 2720
ஆனது அல்லாமல் ஆவதும் அறிவமோ?
ஆனதுக்கு ஓர் ஆகாதது; ஆகாததற்கு ஓர் ஆனது.
ஆன தெய்வத்தை ஆறு கொண்டு போகிறது; அனுமந்தராயனுக்குத் தெப்பத் திருவிழாவா?
ஆனந்த தாண்டவபுரத்தில் எல்லோரும் அயோக்கியர்கள், உங்களைத் தவிர.
ஆனந்த பாஷ்பத்துக்கு அரைப்பலம் மிளகு. 2725
- (புதிய தர்மகர்த்தா சொன்னது.)
ஆனமட்டும் ஆதாளி அடித்துப் போட்டு ஆந்தை போல் விழிக்கிறான்.
- (விழிக்கிறேன்.)
ஆன மாட்டை விற்றவனும் அறுகங் காட்டைத் தொட்டவனும் கெட்டான்.
ஆன முதலை அழிப்பவன் மானம் இழப்பது அரிதல்ல.
ஆனவன் ஆகாதவன் எல்லாவற்றிலும் உண்டு.
- (எங்கும் உண்டு.)