பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தமிழ்ப் பழமொழிகள்


இரவல் சதம் ஆகுமா? மதனி உறவு ஆகுமா?

இரவல் சதமா? திருடன் உறவா?

இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.

(இடுப்புச் சீலையை.)

இரவல் சோறு தஞ்சம் தாங்காது.

(தாங்குமா.)

இரவல் துணியாம்; இரவல் துட்டாம்; இழுத்துக் கொட்டு மேளத்தை; இறுகிக் கட்டு தாலியை. 3385

இரவல் நகையும் இல்லாத வஸ்துவும் அவிசாரி அகமுடையானும் ஆபத்துக்கு உதவார்.

இரவல் புடைவையிலே இது நல்ல கொய்சகந்தான்.

(கொடிய சுகமாம், யாழ்ப்பாண வழக்கு.)

இரவல் புருஷா, கதவைத் திற; ஏமாளிப் புருஷா, வீட்டை விடு.

இரவிமுன் பணி போல.

இரவியைக் கண்ட இருள் போல. 3390

இரவில் உண்ணாமல் பகல் உண்ணாதவனுக்குப் பெருத்தல் இல்லை.

இரவில் எதுசெய்தாலும் அரவில் செய்யாதே.

(அரவு-ராகு காலம்.)

இரவில் போனாலும் பரக்கப் போக வேண்டும்.

இரவு உண்ணான் பருத்திருப்பான்.

(அருத்தா பத்தி.)

இரவு எல்லாம் இறைத்தும் பொழுது விடிந்து போச்சு. 3395

இரவு எல்லாம் திருடினாலும் கன்னக்கோல் சாத்த ஓர் இடம் வேண்டாமா?

இரவு வேளையில் ருத்திராட்சப் பூனை போல்.

இராக் கண்ட கனவு மிடாப் போல வீங்கின கதை.

(இராக் கண்ட சனி.)

இராச் செத்தால் பகல் பிழைக்கிறான்.

(சூரியன்.)

இராத்திரி செத்தால் விளக்கெண்ணெய்க்கு இல்லை; பகலில் செத்தால் வாய்க்கரிசிக்கு இல்லை. 3400

இராப்பகல் கண்ணிலே.

இராப் பட்டினி கிடந்தவன் அகவிலை கேட்பானா?

(அக விலையைக் குறைத்த கதை.)