பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

153


இல்லையா இலை மறைவு, காய் மறைவு?

இல்லையே ஒன்றுக்கும் உதவாத ஒன்று.

(பழமொழி நானூறு.)

இல்லோர் இரப்பது இயல்பு. 3545

இலக்கணப் பெண்சாதி மானியம் காக்கிறாள்.

இலக்கணம் கற்றவன் கலக்கம் அற மன்னர் சபை காண்பான்.

இலக்கணம் புலவர்க்கு அணிகலன்.

இலங்கையில் பிறந்தவன் எல்லாம் இராவணன் ஆவது இல்லை.

இலங்கையைச் சுட்ட குரங்கு. 3550

இலந்தைப் பழப் புழுப் போலத் துடிக்கிறது.

இலவசமாய் வந்த மாட்டை நிலவிலே கட்டி ஓட்டு.

இலவு காத்த கிளி போல.

இலுப்பைச் சர்க்கரைக் கொடையாம்; துரைகள் மெச்சின நடையாம்.

இலுப்பைப் பூப்போல். 3555

இலுப்பைப் பூவைத் திருப்பினால் இரண்டு புறமும் பொத்தல்.

இலை அசைந்தாலும் இலைக்குக் கேடு; முள் அசைந்தாலும் இலைக்குக் கேடு.

இலைக்கும் உண்டு, மட்டையும் பழுப்பும்.

(பட்டையும்.)

இலை சாய்கிற பக்கம் குலை சாயும்.

(இலை-வாழைஇலை.)

இலை தின்னி காய் அறியான். 3560

(இலை-வாழை இலை.)

இலைப் பழுப்பு ஆனாலும் குலப்பழுப்பு ஆகாது.

இலைப் புரை கிளைத்தல்.

(சீவக சிந்தாமணி.)

இலைமறை காய் போல்.

இலை மறைவு, காய் மறைவு.

இலை மறைவு, தலை மறைவு. 3565

இலையும் பழுப்பும் எங்கும் உண்டு.

இவ்வூர்ப் பூனையும் புலால் தின்னாது.

இவருக்குச் சொல்லும் புத்தி கடலிற் பெருங்காயம் கரைத்தாற் போல் ஆகிறது.