பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

157


இறந்தவன் பிள்ளை இருந்தவன் அடைக்கலம்.

இறந்தவனுக்கு எள்ளும் தண்ணீரும். 3645

இறந்தால் போச்சு மூச்சு; மறந்தால் போச்சுக் காசு.

இறந்தாலும் சிங்காரக் கழுவில் இறக்க வேண்டும்.

இறந்து இறந்து பிறந்தாலும் இருவக்கரையானாய்ப் பிறக்க வேணும்.

இறப்பில் இருந்த அகப்பை சோற்றில் விழுந்த மாதிரி.

இறாக் கறியோ, புறாக் கறியோ? 3650

இறுகினால் களி; இளகினால் கூழ்.

இறுத்த குடிக்கு அனர்த்தம் இல்லை.

இறுப்பானுக்குப் பணமும் கிடையாது; உழைப்பானுக்குப் பெண்ணும் கிடையாது.

இறைக்க, இறைக்கக் கிணறு சுரக்கும்.

(ஊறும்.)

இறைக்க ஊறும் மணற்கேணி; ஈயப் பெருகும் பெருஞ் செல்வம். 3655

இறைக்கிற கிணறு சுரக்கும்.

இறைக்கிறவன் இளிச்ச வாயனாக இருந்தால் மாடு மச்சான் முறை கொண்டாடும்.

இறைக்கும் கிணறு ஊறும்.

இறைச்சி தின்றவன் கடுப்புக்கு மருந்து அறிவான்.

இறைச்சி தின்றாலும் எலும்பைக் கோத்துப் போட்டுக் கொள்ளலாமா? 3660

(கழுத்தில் போட்டுக் கொள்ளலாமா? எலும்பைக் கோத்துக் கழுத்தில் அணியலாமா?)

இறைத்த கிணறு ஊறும்; இறையாத கிணறு நாறும்.

(பாழ், ஊறுமா?)

இறைத்த கிணறு சுரக்கும்.

இறைத்தோறும் ஊறும் கிணறு.

(பழமொழி நானுாறு.)

இறையாத கிணறு பாழும் கிணறு.

இறைவனை ஏற்று; அரசனைப் போற்று. 3665