பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

15


அசல் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுவானா?

அசல் வீட்டுக்காரனுக்குப் பரிந்துகொண்டு அகமுடையானை அடித்தாளா?

அசல் வீட்டுக்குப் போகிற பாம்பைக் கையாலே பிடிக்கிறான்.

அசல் வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி. 215

அசைப்புக்கு ஆயிரம் பொன் வாங்குகிறது.

அசை போட்டுத் தின்னுவது மாடு; அசையாமல் விழுங்குவது வீடு.

அசை போட ஏதாவது இருந்தால் அவனா நகருவான்?

அஞ்சலி பந்தனம் யாருக்கும் நன்மை.

(பா-ம்.) பந்தம்.

அஞ்சனக்காரன் முதுகிலே வஞ்சனைக்காரன் ஏறினான். 220

அஞ்சனம் குருட்டு விழிக்கு என்ன செய்யும்?

அஞ்சாத ஆனைக்குப் பஞ்சாங்கம் கோடரி.

அஞ்சா நெஞ்சு படைத்தால் ஆருக்கு ஆவான்?

(பா-ம்.) ஆவாய்.

அஞ்சாவது பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி ஆவான்.

அஞ்சாவது பெண்ணைக் கெஞ்சினாலும் தரமாட்டார்கள். 225

அஞ்சி அஞ்சிச் சாகிறான்.

அஞ்சி ஆண்மை செய்ய வேணும்.

அஞ்சி நடக்கிறவனுக்குக் காலம் இல்லை.

அஞ்சி மணியம் பண்ணாதே; மிஞ்சிப் பிச்சை கேட்காதே.

அஞ்சி மணியம் பர்ர்த்தது கிடையாது; கெஞ்சிக் கடன் கேட்டது கிடையாது. 230

அஞ்சிய அரசன் தஞ்சம் ஆகான்.

அஞ்சில் ஒரு மழை; பிஞ்சில் ஒரு மழை.

(அஞ்சு-செடியில் ஐந்து இலைகள் இருக்கும் சமயம்.)

அஞ்சிலே அறியாதவன் அம்பதிலே அறிவானா?

அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சாமல் அறுபதுக்குமேல் கொஞ்சினான்.

(பா-ம்.) அறுபதுக்குமேல் கொஞ்சினாலும்.

அஞ்சிலே வளையாதது அம்பதிலே வளையாது. 235

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாசம் எல்லாம் பேய்.

அஞ்சினவனுக்கு ஆனை; அஞ்சாதவனுக்குப் பூனை.