பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

185


உழுகிறதை விட்டு உழவன் சாமி ஆடினானாம்.

உழுகிற நாளில் ஊருக்குப் போய்விட்டு அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தாற்போல். 4300

உழுகிற நாளில் ஊரை விட்டுப் போனால் அறுக்கிற நாளில் ஆள் தேட வேண்டாம்.

(ஆள் தேவை இல்லை.)

உழுகிற மாட்டுக்கும் ஒரு படி கொள்ளு; ஊர் சுற்றுகிற மாட்டுக்கும் ஒரு படி கொள்ளா?

உழுகிற மாட்டை எருது நக்கினது போல.

உழுகிற மாட்டைக் கொம்பிலே அடித்தாற் போல.

உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற் போல. 4305

உழுகிற மாடு ஆனால் உள்ளூரில் விலை போகாதா?

(போகும்.)

உழுகிற மாடு ஊருக்குப் போனால் ஏரும் கலப்பையும் எதிர்த்தாற் போல் வரும்.

உழுகிற மாடு பரதேசம் போனால் அங்கு ஒருவன் கட்டி உழுவான்; இங்கு ஒருவன் கட்டி உழுவான்.

உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.

உழுகிறவன் கணக்குப் பார்த்தால் உழவுக் கோலும் மிஞ்சாது. 4310

(உழக்கு நெல்லும்.)

உழுகிறவன்தான் வைக்கோல் போட வேண்டும்.

உழுகிறவனுக்குத்தான் தெரியும், உடம்பு வருத்தம்.

உழுத எருது ஆனாலும் ஒரு முடி நாற்றைத் தின்ன ஒட்டார்.

(ஒரு முடி தின்னவிடார்.)

உழுத காலாலே உழப்பி விடு.

உழுத சேறு காய்ந்தால் உழக்கு நெல் காணாது. 4315

உழுத மாடு ஊருக்குப் போனால் அங்கும் ஒருசால் அடித்துக் கொண்டானாம்.

(அடித்துக் கட்டி உழுதானாம்.)

உழுத மாடு பரதேசம் போச்சாம்; அங்கும் ஒரு சால் கட்டி உழுதானாம்.

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது.

(உழவுகோல் கூட மிச்சம் இல்லை.)