பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

191


உளுவைக் குஞ்சுக்கு நீஞ்சக்கற்றுக் கொடுக்க வேண்டுமா?

உளுவைக் குட்டிக்கு ராய பாரமா?

உளை வழியும் அடைமழையும் பொதி எருதும் ஒருவனுமாய் அலைகிறான். 4445

உற்சாகம் செய்தால் மச்சைத் தாண்டுவான்.

உற்ற கணவனும் ஒரு நெல்லும் உண்டானால் சித்திரம் போலே குடிவாழ்க்கை செய்யலாம்.

உற்ற சிநேகிதன் உயிருக்கு அமிர்தம்.

உற்றது சொல்ல ஊரும் அல்ல; நல்லது சொல்ல நாடும் அல்ல.

உற்றது சொன்னால் அற்றது பொருந்தும் 4450

(பாரதம்.)

உற்ற பேர்களைக் கெடுக்கிறதா?

உற்றார் உதவுவரோ? அன்னியர் உதவுவரோ?

உற்றார்க்கு ஒரு பிள்ளை கொடான்; நமனுக்கு நாலு பிள்ளை கொடுப்பான்.

உற்றார் தின்றால் புற்றாய் விளையும்; ஊரார் தின்றால் போராய் விளையும்.

(வேறாய் விளையும், பேறாய் விளையும்.)

உற்றாருக்கு ஒரு மாசம்; பகைத்தாருக்குப் பத்து நாள். 4455

உற்றாருக்கு ஒன்று கொடான்; பகைவருக்கு நாலும் கொடுப்பான்.

(ஒரு பிள்ளை, நாலு பிள்ளை.)

உற்றுப் பார்க்கில் சுற்றம் இல்லை.

உற்றுப் பார்த்த பார்வையிலே ஒன்பது பேர் பட்டுப் போவார்.

(பார்த்தால்.)

உறக்கத்தில் காலைப் பிடிப்பது போல.

உறக்கம் சண்டாளம். 4460

உறங்காப் புளி, ஊறாக் கிணறு, காயா வருளம், தோரா வழக்குத் திருக்கண்ணங்குடி.

(தீரா வழக்கு, தேறா வழக்கு.)

உறங்கின நரிக்கு உணவு கிட்டாது.

உறவிலே நஞ்சு கலக்கிறதா?

உறவிலே போகிறதைவிட ஒரு கட்டு விறகிலே போகலாம்.

(வேவதைவிட, வேகலாம்.)