பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/241

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

239


ஏட்டில் அடங்காது, எண்ணத் தொலையாது.

ஏட்டில் சர்க்கரை என்று எழுதி நக்கினால் இனிக்குமா? 5560

(தித்திக்குமா?)

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?

(கூட்டுக்கு.)

ஏட்டுச் சுரைக்காயோ, வீட்டுச் சுரைக்காயோ?

ஏடா கூடக்காரனுக்கு இடம் எங்கே என்றால் இருக்கிறவன் தலைமேலே என்பான்.

(வழி எங்கே? போகிறவன் தலைமேலே.)

ஏடாகூடம் எப்படி என்றால் போகின்றவன் தலையில் பொத்தென்று அடித்தான்.

ஏடாகூடம் பேசினால் அகப்பைச் சூனியம் வைப்பேன். 5565

ஏடு அறியாதவன் பீடு பெறாதவன்.

(அறியான், பெறான்.)

ஏடு கிடக்கத் தோடு முடைந்தாளாம்.

ஏடைக்கும் கோடைக்கும் இருந்தால் இழி கண்ணி.

ஏண்டா கருடா சுகமா என்றால், இருக்கிற இடத்தில் இருந்தால் சுகந்தான் என்றான்.

ஏண்டா தம்பி குருநாதா, இதற்குள் வந்து புகுந்து கொண்டாய்? 5570

ஏண்டா தென்ன மரத்தில் ஏறுகிறாய் என்றால் கன்றுக்குட்டிக்குப் புல்பிடுங்க என்றான்; தென்ன மரத்தில் ஏதடா புல் என்றால் அதுதானே கீழே இறங்கி வருகிறேன் என்றான்.

ஏண்டா பட்டப்பகலில் திருடினாய் என்றால் என் அவசரம் உனக்குத் தெரியுமா என்கிறான்.

ஏண்டா புளிய மரத்தில் ஏறினாய் என்றால் புளிய மரத்தில் புல் பறிக்க என்கிறான்.

ஏண்டி கிழவி மஞ்சள் குளிக்கிறாய்? பழைய நினைப்படா பேரா.

ஏணிக் கழிக்குக் கோணற் கழி வெட்டலாமா? 5575

ஏணிக்குக் கோணி.

ஏணிக்குக் கோணியும் ஏட்டிக்குப் போட்டியும்.

ஏணிக் கொம்புக்கு எதிர்க் கொம்பு போடலாமா?