பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/242

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

தமிழ்ப் பழமொழிகள்


ஏணிக் கொம்புக்குக் கோணற் கொம்பு போடலாமா?

(ஏணிக் கழிக்கு.)

ஏணி, தோணி, வாத்தியார், நாரத்தங்காய். 5580

(அண்ணாவி.)

ஏணியைத் தள்ளிவிட்டுப் பரண்மேல் ஏறலாமா?

ஏணி வைத்தாலும் எட்டாது.

ஏணைக் கழிக்குக் கோணற் கழி வெட்டுகிறதா?

ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டாற்போல்.

(தேவாரம்.)

எது என்று கேட்பாரும் இல்லை; எடுத்துப் பிடிப்பாரும் இல்லை. 5585

ஏதுக்கு வீணும் சாணும்.

ஏதும் அற்றவனுக்கு எரிமுட்டைப் பாளையம் திருவிழா; போக்கற்றவனுக்குப் பொன்னேரித் திருவிழா.

ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி?

ஏதும் இல்லை, எக்காந்தமும் இல்லை; பூநாகம்.

ஏந்தாழை என்றால் கோந்தாழை. 5590

ஏப்பம் பரிபூரணம்; சாப்பாடு பூஜ்யம்.

ஏமாந்த சோணகிரி.

ஏமாந்தால் நாமம் போடுவான்; இணைப்பு ஒட்டவில்லை.

ஏய்த்தால் மதனியை ஏய்ப்பேன்; இல்லாவிட்டால் பரதேசம் போவேன்.

(மேய்த்தால்.)

ஏர் அற்றவன் இரப்பாளி. 5595

ஏர் அற்றுப் போனால் சீர் அற்றுப் போகும்.

ஏர் உழுகிறது; கன்னி கரைகிறது.

ஏர் உழுகிற பிள்ளை இளைத்துப் போனால் போகிறது; பரியம் போட்ட பெண்ணைப் பார்த்து வளர்.

ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மைத்துனன் முறை கொண்டாடும்.

(மச்சான் முறை.)