பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/243

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

241


ஏர் உழுகிறவனுக்கு ஏகாதசி விரதமா? 5600

ஏர் ஓட்டுவதிலும் எரு விடுதல் நன்று.

ஏர் நடந்தால் பேர் நடக்கும்.

ஏர் பிடிக்கிறவனுக்கு இடது கையில் மச்சம்; வாழப் புகுந்தவளுக்கு வலது கையில் மச்சம்.

ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.

ஏர் பிடித்தவன் முன்னேறினால் செங்கோல் பிடித்தவன் செழிப்பான். 5605

ஏர் பூட்டுவதற்குள் பிராணன் போய்விடும்.

ஏரி உடைகிறதற்கு முன்னே அணை போட வேண்டும்.

ஏரி உடைத்தவள் கம்பளியைப் பிடித்துக் கொண்டால் சரியா?

ஏரி எத்தனை ஆள் கண்டிருக்கும்? ஆள் எத்தனை ஏரி கண்டிருப்பான்.

(பிட்டம்.)

ஏரிக்கு ஏற்ற எச்சக்கலை; குலத்துக்கு ஏற்ற குசவன் குட்டை. 5610

ஏரிக்குப் பயந்து கால் கழுவாமல் ஓடினானாம்.

ஏரிக்கும் மடுவுக்கும் ஏற்ற வித்தியாசம்.

ஏரி நிமிர்ந்தால் இடையனையும் பாராது.

(ஏரி-திமில்.)

ஏரி நிரம்பினால் இடைக்கரை பொசியும்.

ஏரி நிறைந்தால் கரை கசியும். 5615

(நீர் கசியும்.)

ஏரி நீரைக் கட்டுவது அரிது; உடைப்பது எளிது.

(கட்டுதல், உடைத்தல்.)

ஏரி பெருகில் எங்கும் பெருக்கு.

ஏரி மடை என்றால் நோரி மழை.

ஏரி மிதந்தால் குடை அணை மிறியாது.

(மதியாது.)

ஏரி மேலே கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போனாள். 5620

(போனால் ஏரியா நாறும்.)