பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/244

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

தமிழ்ப் பழமொழிகள்


ஏரியோடு பகை செய்து ஸ்நானம் செய்யாதிருப்பதா?

(ஏரியை மதியாது.)

ஏரியோ தண்ணீர், சூரிய தேவா.

ஏரை அடித்தேனோ, கூழை அடித்தேனோ?

ஏரை இழந்தார் பேரை இழந்தார்.

(இழந்தாயோ, இழந்தாய்.)

ஏலவே தொலைந்தது எங்களை தொட்ட கர்மம். 5625

ஏலாத நாய்க்கு வால் டேங்குவது போல.

ஏலேல சிங்கன் பொருள் ஏழு கடல் போனாலும் திரும்பும்.

(பணம், எங்கே போனாலும்.)

ஏலேலம்! ஏலேலம்! எருமைச் சாணி காய்கிறது.

ஏவற்பேய் கூரையைப் பிடுங்கும்.

ஏவா மக்கள் மூவா மருந்து. 5630

ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல்; இயற்றுகிறவனுக்குத் தலைச்சுமை.

(செய்கிறவனுக்கு.)

ஏழரை நாட்டுச் சனியனை இரவல் வாங்கின கதை.

ஏழு அறை கட்டி அதிலே வைத்தாலும் ஓர் அறையில் சோரம் போவாள்.

(உள்ளே வைத்தாலும், தாழறை வழியே சோரம் போவாள்.)

ஏழாம் பொருத்தம்.

ஏழாயிரம் பொன் பெற்ற குதிரை இறப்பைப் பிடுங்கையில், குருட்டுக் குதிரை கோதுமை ரொட்டிக்கு வீங்கினதாம். 5635

ஏழு உழவு உழுதால் எருப் போட வேண்டாம்.

ஏழு உழவுக்கு ஓர் எடுப்புழவு சரி என்பது போல்.

எழு ஊர் சுற்றிப் பாழூர் மணத்தட்டை.

ஏழு ஊர் லங்கடா, எருமைக்கடா காவு, வீட்டுக்கு ஒரு துடைப்பக் கட்டை, உஷார், உஷார்.

ஏழு ஊருக்கு ஒரு கொல்லன். 5640

(குறுந்தொகை.)

ஏழு ஊருக்கு ஒரு தட்டான்.

ஏழு மடிப்பு உழுத புலமும் ஏழு உலர்த்து உலர்த்தின விதையும் எழுபதுநாள் காய்ச்சல் தாளும்.

ஏழுமலை தாண்டலாம்; ஓர் ஆறு தாண்ட முடியாது.