பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/246

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

தமிழ்ப் பழமொழிகள்


ஏழை வைத்தான் வாழை; மகளை வைத்தான் காவல்.

ஏளிதம் பேசி இவ்வேடம் ஆனேன்.

ஏற்கனவே கோணல் வாய்; அதிலும் கொட்டாவி விட்டால் எப்படி?

ஏற்கனவே துர்ப்பலம்; அதிலும் கர்ப்பிணி.

(துர்ப்பிணி, துர்க்குணி.)

ஏற்கனவே மாமியார் அலங்கோலம்; அதிலே கொஞ்சம் பேய்க் கோலம். 5675

ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் இப்போது கிழக்கோலம்.

(அழகேலம்.)

ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் அக்கிலி, பிக்கிலி.

ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் மாக்கோலம்.

ஏற்கை வாசனை, சேர்க்கை வாசனை.

ஏற்பது இகழ்ச்சி. 5680

ஏற்றக் கோலுக்குப் பிடித்தால் அரிவாள் பிடிக்கு வரும்.

ஏற்றக் கோலுக்கும் அரிவாள் பிடிக்கும் உள்ள தாரதம்யம்.

ஏற்றத்துக்கு மேல் காத்து நிற்பதை விட இரண்டு சால் தண்ணீருக்குக் கஞ்சி குடிக்கலாம்.

ஏற்றப் பறி நிரம்பினால் சோற்றுப் பானை தானே நிரம்பும்.

ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு இல்லை; பூசாரி பாட்டுக்குப் பின்பாட்டு இல்லை. 5685

ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு.

(வேண்டும்.)

ஏற ஆசைப்பட்டால் சாணாரப் பிறவி வேண்டும்.

(சாணானாய்ப் பிறக்க வேண்டும்.)

ஏற ஒன்று இறங்க ஒன்று, எனக்கு ஒன்று, உனக்கு ஒன்று, இன்னொன்று இருக்குது தந்தால் தா, தராவிட்டால் போ.

ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.

(நொண்டிக்குக் கோபம்.)

ஏறச் சொன்னால் குதிரைக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் ராவுத்தருக்குக் கோபம். 5690