பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/247

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

245


ஏறப் படாத மரத்திலே எண்ணப் படாத மாங்காயாம்.

(முடியாத, எண்ணாயிரங்காய்.)

ஏறப் பார்க்கும் நாய்; இறங்கப் பார்க்கும் பூனை.

ஏற முடியாத மரத்திலே எண்ணாயிரம் மாங்காய்.

ஏற விட்டு ஏணியை வாங்குகிறதா!

(வாங்கினாற் போல்.)

ஏறாத வார்த்தை வசமாகுமா? 5695

ஏறாத வார்த்தை வசையோடு ஒக்கும்.

ஏறா மடைக்கு நீர் பாய்ச்சுவது போல.

ஏறா மேடும் பாயாத் தண்ணீரும்.

ஏறாலக்கமாய்ப் பேசுகிறாய்.

ஏறி அடுத்து வில் போட்டால் மாறி அடித்து மழை பெய்யும். 5700

ஏறி இருந்த கொம்பை வெட்டுபவனைப்போல.

ஏறி இறங்கும் திருமேனி, எங்கும் கண்ட திருமேனி, தட்டிக் கொட்டும் திருமேனி, வெள்ளை வெளுக்கும் திருமேனி.

ஏறிய கொக்கு என்று இருந்தாயோ கொங்கணவா?

ஏறின வரையும் திருப்பணி; கீழே கிடப்பதுகல்.

(செட்டி நாட்டு வழக்கு.)

ஏறினால் எருதுக்குக் கோபம்; இறங்கினால் நொண்டிக்குக் கோபம். 5705

(மொண்டிக்கு.)

ஏறினால் குற்றம்; இறங்கினால் அபராதம்.

(இறங்கினால் குற்றம்.)

ஏறுகிற குதிரைக்கு எருதே மேல்.

ஏறுகிற குதிரையிலும் உழவு மாடு அதிக உத்தமம்.

ஏறுகிறவன் இடுப்பை எத்தனை தூரம் தாங்கலாம்?

(பிட்டத்தை.)

ஏறு நெற்றி ஆறுதலை எதிர்க்க வந்தால் ஆகாது. 5710

ஏறும் தேமல், இறங்கும் தேமல்.

ஏறும் தேமல், இறங்கும் படர் தாமரை, கூடும் புருவம் குடியைக் கெடுக்கும்.