பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

33


அதில் எல்லாம் குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி. 665

அதிலும் இது புதுமை; இதிலும் அது புதுமை.

அதிலே இது புதுமை, அவள் செத்து வைத்த அருமை.

(செத்தது வைத்த.)

அதிலே குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி; மாவிலே வெல்லம் இல்லை; மாட்டிக்கொள்ளடா பூசாரி.

அதி விநயம் தூர்த்த லட்சணம்.

அதி விருஷ்டி, அல்லது அநாவிருஷ்டி. 670

(விருஷ்டி-மழை. )

அது அதற்கு ஒரு கவலை; ஐயாவுக்கு எட்டுக் கவலை.

(பத்துக் கவலை.)

அது எல்லாம் உண்டிட்டு வா என்பான்.

அது எல்லாம் ஐதர் காலம்.

அது எல்லாம் கிடக்கிறது ஆட்டடா பூசாரி,

அது ஏண்டி மாமியாரே, அம்மி புரண்டு ஓடுகிறது? 675

அதுக்கு இட்ட காசு தண்டம்.

அதுக்கு இட்ட காசு மினுக்கிட்டு வருவாள், அரிவாள் மணைக்குச் சுருக்கிட்டுத் தா.

அதுக்கும் இருப்பான், இதுக்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்.

(இருப்பான்.)

அது கெட்டது போ, எனக்கா கல்யாணம் என்றானாம்.

அதுதான் ராயர் கட்டளையாய் இருக்கிறதே! 680

அதுவும் போதாதென்று அழலாமா இனி?

(அழுகிறதா?)

அதைக் கை கழுவ வேண்டியதுதான்.

அதைத்தான் சொல்வானேன்? வாய்தான் நோவானேன்?

(வலிப்பானேன்?)

அதை நான் செய்யாவிட்டால் என் பேரை மாற்றிக் கூப்பிடு.

அதை நான் செய்யாவிட்டால் என் மீசையைச் சிரைத்து விடுகிறேன். 685

(எடுத்துவிடுகிறேன்.)

அதைரியம் உள்ளவனை அஞ்சாத வீரன் என்றாற்போல.

அதை விட்டாலும் கதி இல்லை; அப்புறம் போனாலும் விதி இல்லை.

(அப்புறம் போனாலும் வழி இல்லை.)