பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தமிழ்ப் பழமொழிகள்


அந்த ஊர் மண்ணை மிதிக்கவே தன்னை மறந்துவிட்டான்.

அந்தக் காலம் மலை ஏறிப் போச்சு.

அந்தகனுக்கு அரசனும் ஒன்று; ஆண்டியும் ஒன்று. 690

(அந்தகன்-யமன்.)

அந்தணர்க்குத் துணை வேதம்!

அந்தணர் மனையில் சந்தனம் மணக்கும்.

அந்தப் பருப்பு இங்கே வேகாது.

அந்தம் உள்ளவன் ஆட வேணும்; சந்தம் உள்ளவன் பாட வேணும்.

அந்தம் சிந்தி அழகு ஒழுகுகிறது. 695

(அழகு அழுகிறது.)

அந்தரத்தில் கோல் எறிந்த அந்தகனைப் போல,

அந்தரத்திலே விட்டு விட்டான்.

அந்தர வீச்சு வீசி நாயைப் போல் வாலைச் சுருட்டி விட்டான்.

அந்தலை கெட்டுச் சிந்தலை மாறிக் கிடக்கிறது.

அந்த வெட்கக்கேட்டை ஆரோடு சொல்கிறது? 700

(சொல்லி அழுகிறது.)

அந்தி ஈசல் அடை மழைக்கு அறிகுறி.

அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும்.

அந்திக் கண்ணிக்கு அழுதாலும் வரானாம் அகமுடையான்.

அந்திச் சிவப்பு அடை மழைக்கு அடையாளம்.

அந்திச் செவ்வானம் அப்போதே மழை. 705

அந்திச் செவ்வானம் அழுதாலும் மழை இல்லை; விடியச் செவ்வானம் வேண மழை.

அந்திச் செவ்வானம் அறிந்து உண்ணடி மருமகளே; விடியச் செவ்வானம் வேண்டி உண்ணடி மகளே.

அந்திச் செவ்வானம் கிழக்கு; அதிகாலைச் செவ்வானம் மேற்கு.

அந்திச் சோறு உந்திக்கு ஒட்டாது,

அந்திப்பீ, சந்திப்பீ பேணாதான் வாழ்க்கை சாமப்பீ தட்டி எழுப்பும் 710

அந்தி பிடித்த மழையும் அம்மையாரைப் பிடித்த வியாதியும் விடா.

(பிடித்த பிசாசும் விடா.)

அந்தி மழையும் அந்தி விருந்தாளியும் விடமாட்டார்கள்.

அந்தி மழையும் ஒளவையாரைப் பிடித்த பிணியும் விடா.

அந்தியில் அசுவத்தாமன் பட்டம் கட்டிக் கொண்டாற் போல.

அந்து ஊதும் நெல் ஆனேன். 715

(நெல்லைப் போல் ஆனேன். அந்து-ஒருவகைப் பூச்சி.)