பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தமிழ்ப் பழமொழிகள்


அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிக்கிரமம் பண்ணலாமா?

(அதிகாரம் பண்ணலாமா?)

அரி என்றால் ஆண்டிக்குக் கோபம்; அரன் என்றால் தாதனுக்குக் கோபம்.

அரிக்கிற அரிசியை விட்டுச் சிரிக்கிற சின்னப் பையனைப் பார்த்தாளாம்.

அரிகரப் பிரம்மாதிகளாலும் முடியாத காரியம்.

அரிச்சந்திரன் அவன் வீட்டுக் கொல்லை வழியாகப் போனானாம். 990

அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு.

(வீட்டுக்காரன் அவன்.)

அரிசி அள்ளின காக்கைபோல.

அரிசி ஆழாக்கு ஆனாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டும்.

(உழக்கு.)

அரிசி இருந்தால் பிட்டு ஆகுமா?

அரிசி இல்லாவிட்டால் பருப்பும் அரிசியுமாய்ப் பொங்கு. 995

அரிசி இறைத்தால் ஆயிரம் காக்கை.

அரிசி உழக்கு ஆனாலும் திருவந்திக் காப்புக்குக் குறைவு இல்லை.

அரிசி உண்டானால் வரிசை உண்டு. அக்காள் உண்டானால் மச்சான் உண்டு.

(தண்டலையார் சதகம்.)

அரிசி என்று அள்ளிப் பார்ப்பாரும் இல்லை, உமி என்று ஊதிப் பார்ப்பாரும் இல்லை.

(அள்ளவும் முடியவில்லை. ஊதவும் முடியவில்லை.)

அரிசிக்குத் தக்க உலையும் அகமுடையானுக்குத் தக்க வீறாப்பும். 1000

அரிசிக்குத் தக்க கனவுலை.

அரிசிக் குற்றம் சாதம் குழைந்தது; அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்தது.

அரிசி கொடுத்து அக்காள் உறவு என்ன?

அரிசி கொடுத்து அக்காள் வீட்டில் சாப்பாடா?

(என்ன சாப்பாடு?)

அரிசி கொண்டு அக்காள் வீட்டுக்குப் போவானேன்? 1005

அரிசி சிந்தினால் அள்ளி விடலாம்; வார்த்தை சிந்தினால் வார முடியுமா?

அரிசிப் பகையும் அகமுடையாள் பகையும் கிடையாது.

(அகமுடையான்.)

அரிசிப் பல்காரி அவிசாரி, மாட்டுப் பல்காரி மகராஜி.