பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

47


அரிசிப் பானையும் குறையக் கூடாது; ஆண்மகன் முகமும் வாடக் கூடாது.

அரிசிப் பிச்சை எடுத்து அறுகங் காட்டில் கொட்டினாற் போல 1010

அரிசிப் பிச்சை வாங்கி அரிக்கம் சட்டியில் கொட்டினேனே!

அரிசிப் புழு சாப்பிடாதவர் இல்லை; அகமுடையானிடம் அடிபடாத வளும் இல்லை.

அரிசிப் பொதியுடன் திருவாரூர்.

(பொரியுடன், யாழ்ப்பாண வழக்கு.)

அரிசி பருப்பு இருந்தால் ஐப்பசி மாசம் கல்யாணம்; காய்கறி இருந்தால் கார்த்திகை மாசம் கல்யாணம்.

அரிசி மறந்த கூழுக்கு உப்பு ஒன்று குறைவா? 1015

(மறந்த உலைக்கு உப்பு ஏன் குறைவா?)

அரிசியும் உமியும் போல.

அரிசியும் கறியும் உண்டானால் அக்காள் வீடு வேண்டும்.

அரிசியும் காய்கறியும் வாங்கிக் கொண்டு அக்காள் வீட்டுக்குச் சாப்பிடப் போன மாதிரி.

அரித்தவன் சொறிந்து கொள்வான்.

அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயம் தீர்வை உண்டோ? 1020

அரிதாரம் கொண்டு போகிற நாய்க்கு அங்கு இரண்டு அடி: இங்கு இரண்டு அடி.

அரிது அரிது, அஞ்செழுத்து உணர்த்தல்.

அரிது அரிது, மானிடர் ஆதல் அரிது.

அரிப்புக்காரச் சின்னிக்கு அடுப்பங்கரைச் சோறு; எரிப்புக்கார எசக்கி எத்திலே தின்பாள் சோறு.

அரியக்குடி நகரம் அத்தனையும் அத்தனையே. 1025

(அசம்பாவிதக் கவிராயர் பாடியது, ஜனத் தொகை ஒரே மாதி; இருக்குமாம்.)

அரிய சரீரம் அந்தரத்தில் எறிந்த கல்.

அரியது செய்து எளியதுக்கு ஏமாந்து நிற்கிறான்.

(திரிகிறான்.)

அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு.

(அல்ல என்கிறவன் வாயில் மண்ணு.)

அரிவாள் ஆடுமட்டும் குடுவையும் ஆடும்.

(யாழ்ப்பாண வழக்கு.)

அரிவாள் சுருக்கே, அரிவாள் மணை சுருக்கே. 1030